வணக்கம்.
அச்சு இதழாக வெளி வந்து கொண்டிருந்த கணையாழியை இணையத்தில் சோதனை முயற்சியாக emagaz.in நிறுவனத்துடன் இணைந்து இணைய இதழாக கொண்டு வந்தோம். ஆன்லைன் மின்னூலாக மட்டுமே கணையாழியை வாசிக்கும் வாய்ப்பினை இது வழங்கிக்கொண்டிருந்தது.
முழுமையான இணைய இதழின் தேவையறிந்து கணினிக்குத் தரவிறக்கி தேவைப்படும் நேரத்தில் வாசிக்கும் வகையில் தற்சமயம் கணையாழியை http://www.magzter.com/ வலைப்பக்கத்தில் இணைய இதழாக வெளியிடுகின்றோம் என்ற தகவலைப் பகிர்ந்து கொள்வதில் கணையாழி ஆசிரியர் குழு மகிழ்கின்றோம்.
இதன் வழி கணையாழியை இணைய இதழாக வாசிக்க விரும்புபவர்கள் இவ்வலைப்பக்கம் சென்று தங்கள் தேவைக்கேற்ற மின்னூல் வாசிப்பு கருவிக்கேற்ற வகையில் கணையாழியை தரவிறக்கி வாசிக்கலாம். கணையாழி விண்டோஸ், iPhone, iPad, Android, என முக்கிய மின்னூல் வாசிப்புக் கருவிகளுக்கேற்ற வடிவத்தில் இங்கு வழங்கப்படுகின்றது.
இந்தச் சேவையைப் பெற நீங்கள் செய்ய வேண்டியவை:
கணையாழி இணைய இதழாக வருவதால் தமிழகம் மட்டுமன்றி அயல் நாட்டில் வாழும் தமிழர்களும் சஞ்சிகையை வாங்கிப் படித்து பயன்பெற முடியும் என்ற நம்பிக்கையைக் கணையாழி ஆசிரியர் குழுவினர் கொண்டிருக்கின்றோம். உங்கள் ஆதரவு கணையாழி இணைய இதழ் தொடர்ந்து வலம் வர உதவும்.
இச்செய்தியை நீங்கள் வாசிப்பதோடு உங்கள் நண்பர்கள் வட்டாரத்திலும் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
அன்புடன்
கணையாழி ஆசிரியர் குழு

- http://www.magzter.com/ வலைப்பக்கம் சென்று அங்கே உங்களுக்கு ஒரு உறுப்பினர் கணக்கை உருவாக்குங்கள்
- கணையாழி இதழை தேடு பகுதியில் kanaiyazhi என தட்டச்சு செய்து தேடுங்கள் அல்லது tamil என தட்டச்சு செய்து தேடினால் ஏனைய தமிழ் சஞ்சிகைகளும் பட்டியலாகக் கிடைக்கும். அதில் கணையாழியைக் காணலாம். அல்லது http://www.magzter.com/search_magazine.php?search_magazine=kanaiyazhi&x=24&y=13 சென்று பாருங்கள்.
- இங்கே மாத சஞ்சிகை, 3 மாத கட்டணம், 6 மாதக் கட்டணம், 1 வருட சந்தா கட்டணம் என பிரித்திருக்கும். நீங்கள் விரும்பும் சந்தா விவரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
- க்ரேடிட் கார்ட் கட்டண அமைப்பு இங்கே வழங்கப்பட்டுள்ளது.பொதுவாகப் பிரபலமான Visa, mastercard, AmEx, Discover JCB ஏதாகினும் ஒன்றை நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால் சுலபமாக கட்டணத்தைச் செலுத்தி இதழை பெற்றுக் கொள்ளலாம்.