வணக்கம்.
கணையாழி இலக்கிய இதழ் வாசகர்களுக்கு....
......................டிசம்பர் மாத கணையாழி வெளிவந்து விட்டது.
தமிழகம் தவிர்த்த அயல்நாடுகளில் வசிப்பவர்கள் மின்னூலாகவும் இணையத்தில் சந்தாதாரராகி தரவிறக்கி உங்கள் செல்போன், ஐபேட், கிண்டள் போன்ற மின்னூல் வாசிப்புக் கருவிகளில் வாசிக்கலாம்.
இந்த இணையச் சேவையைப் பெற நீங்கள் செய்ய வேண்டியவை:
http://www.magzter.com/ வலைப்பக்கம் சென்று அங்கே உங்களுக்கு ஒரு உறுப்பினர் கணக்கை உருவாக்குங்கள்.
கணையாழி இதழை தேடு பகுதியில் kanaiyazhi என தட்டச்சு செய்து தேடுங்கள் அல்லது tamil என தட்டச்சு செய்து தேடினால் ஏனைய தமிழ் சஞ்சிகைகளும் பட்டியலாகக் கிடைக்கும். அதில் கணையாழியைக் காணலாம். அல்லது http://www.magzter.com/search_ magazine.php?search_magazine= kanaiyazhi&x=24&y=13 சென்று பாருங்கள்.
இங்கே மாத சஞ்சிகை, 3 மாத கட்டணம், 6 மாதக் கட்டணம், 1 வருட சந்தா கட்டணம் என பிரித்திருக்கும். நீங்கள் விரும்பும் சந்தா விவரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
க்ரேடிட் கார்ட் கட்டண அமைப்பு இங்கே வழங்கப்பட்டுள்ளது.பொதுவாகப் பிரபலமான Visa, mastercard, AmEx, Discover JCB ஏதாகினும் ஒன்றை நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால் சுலபமாக கட்டணத்தைச் செலுத்தி இதழை பெற்றுக் கொள்ளலாம்.
கணையாழி இணைய இதழாக வருவதால் தமிழகம் மட்டுமன்றி அயல் நாட்டில் வாழும் தமிழர்களும் சஞ்சிகையை வாங்கிப் படித்து பயன்பெற முடியும் என்ற நம்பிக்கையைக் கணையாழி ஆசிரியர் குழுவினர் கொண்டிருக்கின்றோம். உங்கள் ஆதரவு கணையாழி இணைய இதழ் தொடர்ந்து வலம் வர உதவும்.
கணையாழி இதழை ஆயுள் உறுப்பினராகி ஒவ்வொரு மாதமும் பெற்று வாசித்து மகிழலாம்.
- ஆயுள் சந்தா கட்டணம்
- தமிழகம் - 5000 ரூபாய்
- அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் - USD$ 250
இச்செய்தியை நீங்கள் வாசிப்பதோடு உங்கள் நண்பர்கள் வட்டாரத்திலும் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
அச்சு இதழாகவும் இணைய இதழாகவும் வெளிவரும் கணையாழியை வாங்கி வாசித்து மகிழுங்கள்.
கணையாழி ஆசிரியர் குழு!
ஐயா,
ReplyDeleteதமிழ்மொழியை எழுதும்போது எப்படியெழுதுவதென்பதற்கான உரைநடையிலக்கனமெதுவும் இல்லையென்பது பொதுவாக அனைவரும் கொண்டிருக்கும் ஒரு கருத்து. 'புணர்ச்சி' என்னும் இலக்கணம் செய்யுளுக்குமட்டுமேயுரியதென்று பலரும் எண்ணியுள்ளனர். ஆனால், உரைநடைக்கிலக்கணமாவதும் அதுவேதான்! புணர்ச்சியின் செயற்பாடு என்னவென்றுகேட்டால், அது ஒருவர் சொல்லவரும் பொருளை, அதில் குழப்பமேதுமின்றி அதாவது அதிலிருந்து வேறுபொருளை கொள்ளமுடியாதவாறு தெளிவாகச்சொல்வதற்கு புணர்ச்சி வகைசெய்கிறது.
ஆனால் இன்று இந்த புணர்ச்சியை ஒருவரும் சரியாய்ச்செய்யாததால், புணர்ச்சிக்குற்றமில்லாததாக எழுத்தை எங்குமேகாணமுடியவில்லை. தமிழ்ப்பாடநூல்களிலிருந்து பற்பல அறிஞர்கள் இதுவரை எழுதி வெளியிட்டிருக்கும் எல்லாநூல்களுமே புணர்ச்சியைப்பொருத்தவரை பிழைகொண்டவையாகவேயுள்ளன. இலக்கணவிளக்கநூல்களும் இதற்கு விலக்கல்ல!
தங்கள் இதழில் புனர்ச்சியைப்பற்றியும் அதை எவ்வாறு பயன்படுத்துவதென்பதுபற்றியும் எழுதுவதற்கு அனுமதிதருவீர்களானால், நான் எழுதுவதற்கு விரும்புகிறேன்.
இதுபற்றி மேலும் அறியவிரும்பினால், 9496803041 என்ற என் எண்ணில் என்னை அழைக்கவும்.
அன்புடன் பொன்முடி.