வணக்கம்.
கணையாழி இலக்கிய இதழ் வாசகர்களுக்கு....
......................இவாண்டி ன் முதல் இதழ்.. ஜனவரிமாத கணையாழி வெளிவந்து விட்டது.
தமிழகம் தவிர்த்த அயல்நாடுகளில் வசிப்பவர்கள் மின்னூலாகவும் இணையத்தில் சந்தாதாரராகி தரவிறக்கி உங்கள் செல்போன், ஐபேட், கிண்டள் போன்ற மின்னூல் வாசிப்புக் கருவிகளில் வாசிக்கலாம்.
இந்த இணையச் சேவையைப் பெற நீங்கள் செய்ய வேண்டியவை:
http://www.magzter.com/ வலைப்பக்கம் சென்று அங்கே உங்களுக்கு ஒரு உறுப்பினர் கணக்கை உருவாக்குங்கள்.
கணையாழி இதழை தேடு பகுதியில் kanaiyazhi என தட்டச்சு செய்து தேடுங்கள் அல்லது tamil என தட்டச்சு செய்து தேடினால் ஏனைய தமிழ் சஞ்சிகைகளும் பட்டியலாகக் கிடைக்கும். அதில் கணையாழியைக் காணலாம். அல்லது http://www.magzter.com/search_ magazine.php?search_magazine= kanaiyazhi&x=24&y=13 சென்று பாருங்கள்.
இங்கே மாத சஞ்சிகை, 3 மாத கட்டணம், 6 மாதக் கட்டணம், 1 வருட சந்தா கட்டணம் என பிரித்திருக்கும். நீங்கள் விரும்பும் சந்தா விவரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
க்ரேடிட் கார்ட் கட்டண அமைப்பு இங்கே வழங்கப்பட்டுள்ளது.பொதுவாகப் பிரபலமான Visa, mastercard, AmEx, Discover JCB ஏதாகினும் ஒன்றை நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால் சுலபமாக கட்டணத்தைச் செலுத்தி இதழை பெற்றுக் கொள்ளலாம்.
கணையாழி இணைய இதழாக வருவதால் தமிழகம் மட்டுமன்றி அயல் நாட்டில் வாழும் தமிழர்களும் சஞ்சிகையை வாங்கிப் படித்து பயன்பெற முடியும் என்ற நம்பிக்கையைக் கணையாழி ஆசிரியர் குழுவினர் கொண்டிருக்கின்றோம். உங்கள் ஆதரவு கணையாழி இணைய இதழ் தொடர்ந்து வலம் வர உதவும்.
கணையாழி இதழை ஆயுள் உறுப்பினராகி ஒவ்வொரு மாதமும் பெற்று வாசித்து மகிழலாம்.
- ஆயுள் சந்தா கட்டணம்
- தமிழகம் - 5000 ரூபாய்
- அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் - USD$ 250
இச்செய்தியை நீங்கள் வாசிப்பதோடு உங்கள் நண்பர்கள் வட்டாரத்திலும் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
அச்சு இதழாகவும் இணைய இதழாகவும் வெளிவரும் கணையாழியை வாங்கி வாசித்து மகிழுங்கள்.
கணையாழி ஆசிரியர் குழு!
Dr.Subashini , Please give Kanaiyazhi publisher contact number or website or direct email id without these stuff , the information is in complete and of NO USE
ReplyDelete