Sunday, March 29, 2015

ஏப்ரல் 2015 - கணையாழி இதழ்

வணக்கம்.

கணையாழி இலக்கிய இதழ் வாசகர்களுக்கு....
          ......................ஏப்ரல் மாத கணையாழி வெளிவந்து விட்டது.

​தமிழகம் தவிர்த்த அயல்நாடுகளில் வசிப்பவர்கள் மின்னூலாகவும் இணையத்தில் சந்தாதாரராகி தரவிறக்கி உங்கள் செல்போன், ஐபேட், கிண்டள் போன்ற மின்னூல் வாசிப்புக் கருவிகளில் வாசிக்கலாம்.

இந்த இணையச் சேவையைப் பெற நீங்கள் செய்ய வேண்டியவை:
http://www.magzter.com/ வலைப்பக்கம் சென்று அங்கே உங்களுக்கு ஒரு உறுப்பினர் கணக்கை உருவாக்குங்கள்.

கணையாழி இதழை தேடு பகுதியில் kanaiyazhi என தட்டச்சு செய்து தேடுங்கள் அல்லது tamil  என தட்டச்சு செய்து தேடினால் ஏனைய தமிழ் சஞ்சிகைகளும் பட்டியலாகக் கிடைக்கும். அதில் கணையாழியைக் காணலாம். அல்லது http://www.magzter.com/search_magazine.php?search_magazine=kanaiyazhi&x=24&y=13 சென்று பாருங்கள்.

இங்கே மாத சஞ்சிகை, 3 மாத கட்டணம், 6 மாதக் கட்டணம், 1 வருட சந்தா கட்டணம் என பிரித்திருக்கும். நீங்கள் விரும்பும் சந்தா விவரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

க்ரேடிட் கார்ட் கட்டண அமைப்பு இங்கே வழங்கப்பட்டுள்ளது.பொதுவாகப் பிரபலமான Visa, mastercard, AmEx, Discover JCB ஏதாகினும் ஒன்றை நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால் சுலபமாக கட்டணத்தைச் செலுத்தி இதழை பெற்றுக் கொள்ளலாம்.

கணையாழி இணைய இதழாக வருவதால்  தமிழகம் மட்டுமன்றி அயல் நாட்டில் வாழும் தமிழர்களும் சஞ்சிகையை வாங்கிப் படித்து பயன்பெற முடியும் என்ற நம்பிக்கையைக் கணையாழி  ஆசிரியர் குழுவினர் கொண்டிருக்கின்றோம்.  உங்கள் ஆதரவு கணையாழி இணைய இதழ் தொடர்ந்து வலம் வர உதவும்.

கணையாழி இதழை ஆயுள் உறுப்பினராகி ஒவ்வொரு மாதமும் பெற்று வாசித்து மகிழலாம்.
ஆயுள் சந்தா கட்டணம்
தமிழகம் - 5000 ரூபாய்
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் - USD$ 250

இச்செய்தியை நீங்கள் வாசிப்பதோடு உங்கள் நண்பர்கள் வட்டாரத்திலும் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

அச்சு இதழாகவும் இணைய இதழாகவும் வெளிவரும் கணையாழியை வாங்கி வாசித்து மகிழுங்கள்.

கணையாழி ஆசிரியர் குழு!
​http://kanaiyazhi-ezine.blogspot.com

Thursday, January 1, 2015

ஜனவரி 2015 - கணையாழி இதழ்

வணக்கம்.

கணையாழி இலக்கிய இதழ் வாசகர்களுக்கு....
          ......................இவாண்டின் முதல் இதழ்.. ஜனவரிமாத கணையாழி வெளிவந்து விட்டது. 

தமிழகம் தவிர்த்த அயல்நாடுகளில் வசிப்பவர்கள் மின்னூலாகவும் இணையத்தில் சந்தாதாரராகி தரவிறக்கி உங்கள் செல்போன், ஐபேட், கிண்டள் போன்ற மின்னூல் வாசிப்புக் கருவிகளில் வாசிக்கலாம். 

இந்த இணையச் சேவையைப் பெற நீங்கள் செய்ய வேண்டியவை:
http://www.magzter.com/ வலைப்பக்கம் சென்று அங்கே உங்களுக்கு ஒரு உறுப்பினர் கணக்கை உருவாக்குங்கள்.

கணையாழி இதழை தேடு பகுதியில் kanaiyazhi என தட்டச்சு செய்து தேடுங்கள் அல்லது tamil  என தட்டச்சு செய்து தேடினால் ஏனைய தமிழ் சஞ்சிகைகளும் பட்டியலாகக் கிடைக்கும். அதில் கணையாழியைக் காணலாம். அல்லது http://www.magzter.com/search_magazine.php?search_magazine=kanaiyazhi&x=24&y=13 சென்று பாருங்கள்.

இங்கே மாத சஞ்சிகை, 3 மாத கட்டணம், 6 மாதக் கட்டணம், 1 வருட சந்தா கட்டணம் என பிரித்திருக்கும். நீங்கள் விரும்பும் சந்தா விவரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

க்ரேடிட் கார்ட் கட்டண அமைப்பு இங்கே வழங்கப்பட்டுள்ளது.பொதுவாகப் பிரபலமான Visa, mastercard, AmEx, Discover JCB ஏதாகினும் ஒன்றை நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால் சுலபமாக கட்டணத்தைச் செலுத்தி இதழை பெற்றுக் கொள்ளலாம்.

கணையாழி இணைய இதழாக வருவதால்  தமிழகம் மட்டுமன்றி அயல் நாட்டில் வாழும் தமிழர்களும் சஞ்சிகையை வாங்கிப் படித்து பயன்பெற முடியும் என்ற நம்பிக்கையைக் கணையாழி  ஆசிரியர் குழுவினர் கொண்டிருக்கின்றோம்.  உங்கள் ஆதரவு கணையாழி இணைய இதழ் தொடர்ந்து வலம் வர உதவும்.

கணையாழி இதழை ஆயுள் உறுப்பினராகி ஒவ்வொரு மாதமும் பெற்று வாசித்து மகிழலாம். 
  • ஆயுள் சந்தா கட்டணம்
  • தமிழகம் - 5000 ரூபாய்
  • அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் - USD$ 250

இச்செய்தியை நீங்கள் வாசிப்பதோடு உங்கள் நண்பர்கள் வட்டாரத்திலும் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். 

அச்சு இதழாகவும் இணைய இதழாகவும் வெளிவரும் கணையாழியை வாங்கி வாசித்து மகிழுங்கள்.

கணையாழி ஆசிரியர் குழு!

Monday, December 1, 2014

டிசம்பர் 2014 - கணையாழி இதழ்

வணக்கம்.

கணையாழி இலக்கிய இதழ் வாசகர்களுக்கு....
          ......................டிசம்பர் மாத கணையாழி வெளிவந்து விட்டது. 

Monday, November 3, 2014

நவம்பர் 2014 - கணையாழி இதழ்

வணக்கம்.

கணையாழி இலக்கிய இதழ் வாசகர்களுக்கு....
          ......................நவம்பர் மாத கணையாழி வெளிவந்து விட்டது. 

தமிழகம் தவிர்த்த அயல்நாடுகளில் வசிப்பவர்கள் மின்னூலாகவும் இணையத்தில் சந்தாதாரராகி தரவிறக்கி உங்கள் செல்போன், ஐபேட், கிண்டள் போன்ற மின்னூல் வாசிப்புக் கருவிகளில் வாசிக்கலாம். 

இந்த இணையச் சேவையைப் பெற நீங்கள் செய்ய வேண்டியவை:
http://www.magzter.com/ வலைப்பக்கம் சென்று அங்கே உங்களுக்கு ஒரு உறுப்பினர் கணக்கை உருவாக்குங்கள்.

கணையாழி இதழை தேடு பகுதியில் kanaiyazhi என தட்டச்சு செய்து தேடுங்கள் அல்லது tamil  என தட்டச்சு செய்து தேடினால் ஏனைய தமிழ் சஞ்சிகைகளும் பட்டியலாகக் கிடைக்கும். அதில் கணையாழியைக் காணலாம். அல்லதுhttp://www.magzter.com/search_magazine.php?search_magazine=kanaiyazhi&x=24&y=13 சென்று பாருங்கள்.

இங்கே மாத சஞ்சிகை, 3 மாத கட்டணம், 6 மாதக் கட்டணம், 1 வருட சந்தா கட்டணம் என பிரித்திருக்கும். நீங்கள் விரும்பும் சந்தா விவரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.

க்ரேடிட் கார்ட் கட்டண அமைப்பு இங்கே வழங்கப்பட்டுள்ளது.பொதுவாகப் பிரபலமான Visa, mastercard, AmEx, Discover JCB ஏதாகினும் ஒன்றை நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால் சுலபமாக கட்டணத்தைச் செலுத்தி இதழை பெற்றுக் கொள்ளலாம்.

கணையாழி இணைய இதழாக வருவதால்  தமிழகம் மட்டுமன்றி அயல் நாட்டில் வாழும் தமிழர்களும் சஞ்சிகையை வாங்கிப் படித்து பயன்பெற முடியும் என்ற நம்பிக்கையைக் கணையாழி  ஆசிரியர் குழுவினர் கொண்டிருக்கின்றோம்.  உங்கள் ஆதரவு கணையாழி இணைய இதழ் தொடர்ந்து வலம் வர உதவும்.

கணையாழி இதழை ஆயுள் உறுப்பினராகி ஒவ்வொரு மாதமும் பெற்று வாசித்து மகிழலாம். 
  • ஆயுள் சந்தா கட்டணம்
  • தமிழகம் - 5000 ரூபாய்
  • அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் - USD$ 250

இச்செய்தியை நீங்கள் வாசிப்பதோடு உங்கள் நண்பர்கள் வட்டாரத்திலும் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். 

அச்சு இதழாகவும் இணைய இதழாகவும் வெளிவரும் கணையாழியை வாங்கி வாசித்து மகிழுங்கள்.

கணையாழி ஆசிரியர் குழு!

Wednesday, October 1, 2014

அக்டோபர் 2014 - கணையாழி இதழ்

வணக்கம்.

கணையாழி இலக்கிய இதழ் வாசகர்களுக்கு....
          ......................அக்டோபர் மாத கணையாழி வெளிவந்து விட்டது.

தமிழகம் தவிர்த்த அயல்நாடுகளில் வசிப்பவர்கள் மின்னூலாகவும் இணையத்தில் சந்தாதாரராகி தரவிறக்கி உங்கள் செல்போன், ஐபேட், கிண்டல் போன்ற மின்னூல் வாசிப்புக் கருவிகளில் வாசிக்கலாம்.

இந்த இணையச் சேவையைப் பெற நீங்கள் செய்ய வேண்டியவை:
http://www.magzter.com/ வலைப்பக்கம் சென்று அங்கே உங்களுக்கு ஒரு உறுப்பினர் கணக்கை உருவாக்குங்கள்
கணையாழி இதழை தேடு பகுதியில் kanaiyazhi என தட்டச்சு செய்து தேடுங்கள் அல்லது tamil  என தட்டச்சு செய்து தேடினால் ஏனைய தமிழ் சஞ்சிகைகளும் பட்டியலாகக் கிடைக்கும். அதில் கணையாழியைக் காணலாம். அல்லது http://www.magzter.com/search_magazine.php?search_magazine=kanaiyazhi&x=24&y=13 சென்று பாருங்கள்.
இங்கே மாத சஞ்சிகை, 3 மாத கட்டணம், 6 மாதக் கட்டணம், 1 வருட சந்தா கட்டணம் என பிரித்திருக்கும். நீங்கள் விரும்பும் சந்தா விவரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
க்ரேடிட் கார்ட் கட்டண அமைப்பு இங்கே வழங்கப்பட்டுள்ளது.பொதுவாகப் பிரபலமான Visa, mastercard, AmEx, Discover JCB ஏதாகினும் ஒன்றை நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால் சுலபமாக கட்டணத்தைச் செலுத்தி இதழை பெற்றுக் கொள்ளலாம்.

கணையாழி இணைய இதழாக வருவதால்  தமிழகம் மட்டுமன்றி அயல் நாட்டில் வாழும் தமிழர்களும் சஞ்சிகையை வாங்கிப் படித்து பயன்பெற முடியும் என்ற நம்பிக்கையைக் கணையாழி  ஆசிரியர் குழுவினர் கொண்டிருக்கின்றோம்.  உங்கள் ஆதரவு கணையாழி இணைய இதழ் தொடர்ந்து வலம் வர உதவும்.

கணையாழி இதழை ஆயுள் உறுப்பினராகி ஒவ்வொரு மாதமும் பெற்று வாசித்து மகிழலாம்.
ஆயுள் சந்தா கட்டணம்
தமிழகம் - 5000 ரூபாய்
அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் - USD$ 250

இச்செய்தியை நீங்கள் வாசிப்பதோடு உங்கள் நண்பர்கள் வட்டாரத்திலும் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

அச்சு இதழாகவும் இணைய இதழாகவும் வெளிவரும் கணையாழியை வாங்கி வாசித்து மகிழுங்கள்.

கணையாழி ஆசிரியர் குழு!
​http://kanaiyazhi-ezine.blogspot.com

Friday, August 1, 2014

ஆகஸ்ட் 2014 - கணையாழி இதழ்

வணக்கம்.

கணையாழி இலக்கிய இதழ் வாசகர்களுக்கு....
          ......................ஆகஸ்ட் மாத கணையாழி வெளிவந்து விட்டது.

தமிழகம் தவிர்த்த அயல்நாடுகளில் வசிப்பவர்கள் மின்னூலாகவும் இணையத்தில் சந்தாதாரராகி தரவிறக்கி உங்கள் செல்போன், ஐபேட், கிண்டல் போன்ற மின்னூல் வாசிப்புக் கருவிகளில் வாசிக்கலாம்.

இந்த இணையச் சேவையைப் பெற நீங்கள் செய்ய வேண்டியவை:
http://www.magzter.com/ வலைப்பக்கம் சென்று அங்கே உங்களுக்கு ஒரு உறுப்பினர் கணக்கை உருவாக்குங்கள்
கணையாழி இதழை தேடு பகுதியில் kanaiyazhi என தட்டச்சு செய்து தேடுங்கள் அல்லது tamil  என தட்டச்சு செய்து தேடினால் ஏனைய தமிழ் சஞ்சிகைகளும் பட்டியலாகக் கிடைக்கும். அதில் கணையாழியைக் காணலாம். அல்லது http://www.magzter.com/search_magazine.php?search_magazine=kanaiyazhi&x=24&y=13 சென்று பாருங்கள்.
இங்கே மாத சஞ்சிகை, 3 மாத கட்டணம், 6 மாதக் கட்டணம், 1 வருட சந்தா கட்டணம் என பிரித்திருக்கும். நீங்கள் விரும்பும் சந்தா விவரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
க்ரேடிட் கார்ட் கட்டண அமைப்பு இங்கே வழங்கப்பட்டுள்ளது.பொதுவாகப் பிரபலமான Visa, mastercard, AmEx, Discover JCB ஏதாகினும் ஒன்றை நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால் சுலபமாக கட்டணத்தைச் செலுத்தி இதழை பெற்றுக் கொள்ளலாம்.

கணையாழி இணைய இதழாக வருவதால்  தமிழகம் மட்டுமன்றி அயல் நாட்டில் வாழும் தமிழர்களும் சஞ்சிகையை வாங்கிப் படித்து பயன்பெற முடியும் என்ற நம்பிக்கையைக் கணையாழி  ஆசிரியர் குழுவினர் கொண்டிருக்கின்றோம்.  உங்கள் ஆதரவு கணையாழி இணைய இதழ் தொடர்ந்து வலம் வர உதவும்.

கணையாழி இதழை ஆயுள் உறுப்பினராகி ஒவ்வொரு மாதமும் பெற்று வாசித்து மகிழலாம்.

  • ஆயுள் சந்தா கட்டணம்
  • தமிழகம் - 5000 ரூபாய்
  • அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் - USD$ 250

இச்செய்தியை நீங்கள் வாசிப்பதோடு உங்கள் நண்பர்கள் வட்டாரத்திலும் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

அச்சு இதழாகவும் இணைய இதழாகவும் வெளிவரும் கணையாழியை வாங்கி வாசித்து மகிழுங்கள்.

கணையாழி ஆசிரியர் குழு!
​http://kanaiyazhi-ezine.blogspot.com

Tuesday, July 1, 2014

ஜூலை 2014 - கணையாழி இதழ்

வணக்கம்.

கணையாழி இலக்கிய இதழ் வாசகர்களுக்கு....
          ......................ஜூலை மாத கணையாழி வெளிவந்து விட்டது.

தமிழகம் தவிர்த்த அயல்நாடுகளில் வசிப்பவர்கள் மின்னூலாகவும் இணையத்தில் சந்தாதாரராகி தரவிறக்கி உங்கள் செல்போன், ஐபேட், கிண்டல் போன்ற மின்னூல் வாசிப்புக் கருவிகளில் வாசிக்கலாம்.

இந்த இணையச் சேவையைப் பெற நீங்கள் செய்ய வேண்டியவை:
http://www.magzter.com/ வலைப்பக்கம் சென்று அங்கே உங்களுக்கு ஒரு உறுப்பினர் கணக்கை உருவாக்குங்கள்
கணையாழி இதழை தேடு பகுதியில் kanaiyazhi என தட்டச்சு செய்து தேடுங்கள் அல்லது tamil  என தட்டச்சு செய்து தேடினால் ஏனைய தமிழ் சஞ்சிகைகளும் பட்டியலாகக் கிடைக்கும். அதில் கணையாழியைக் காணலாம். அல்லது http://www.magzter.com/search_magazine.php?search_magazine=kanaiyazhi&x=24&y=13 சென்று பாருங்கள்.
இங்கே மாத சஞ்சிகை, 3 மாத கட்டணம், 6 மாதக் கட்டணம், 1 வருட சந்தா கட்டணம் என பிரித்திருக்கும். நீங்கள் விரும்பும் சந்தா விவரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
க்ரேடிட் கார்ட் கட்டண அமைப்பு இங்கே வழங்கப்பட்டுள்ளது.பொதுவாகப் பிரபலமான Visa, mastercard, AmEx, Discover JCB ஏதாகினும் ஒன்றை நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால் சுலபமாக கட்டணத்தைச் செலுத்தி இதழை பெற்றுக் கொள்ளலாம்.

கணையாழி இணைய இதழாக வருவதால்  தமிழகம் மட்டுமன்றி அயல் நாட்டில் வாழும் தமிழர்களும் சஞ்சிகையை வாங்கிப் படித்து பயன்பெற முடியும் என்ற நம்பிக்கையைக் கணையாழி  ஆசிரியர் குழுவினர் கொண்டிருக்கின்றோம்.  உங்கள் ஆதரவு கணையாழி இணைய இதழ் தொடர்ந்து வலம் வர உதவும்.

இச்செய்தியை நீங்கள் வாசிப்பதோடு உங்கள் நண்பர்கள் வட்டாரத்திலும் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

அச்சு இதழாகவும் இணைய இதழாகவும் வெளிவரும் கணையாழியை வாங்கி வாசித்து மகிழுங்கள்.

கணையாழி ஆசிரியர் குழு!
​http://kanaiyazhi-ezine.blogspot.com

Friday, May 30, 2014

ஜூன் 2014 - கணையாழி

வணக்கம்.

கணையாழி இலக்கிய இதழ் வாசகர்களுக்கு....
          ......................ஜூன் மாத கணையாழி வெளிவந்து விட்டது. 

தமிழகம் தவிர்த்த அயல்நாடுகளில் வசிப்பவர்கள் மின்னூலாகவும் இணையத்தில் சந்தாதாரராகி தரவிறக்கி உங்கள் செல்போன், ஐபேட், கிண்டல் போன்ற மின்னூல் வாசிப்புக் கருவிகளில் வாசிக்கலாம். 

இந்த இணையச் சேவையைப் பெற நீங்கள் செய்ய வேண்டியவை:
http://www.magzter.com/ வலைப்பக்கம் சென்று அங்கே உங்களுக்கு ஒரு உறுப்பினர் கணக்கை உருவாக்குங்கள்
கணையாழி இதழை தேடு பகுதியில் kanaiyazhi என தட்டச்சு செய்து தேடுங்கள் அல்லது tamil  என தட்டச்சு செய்து தேடினால் ஏனைய தமிழ் சஞ்சிகைகளும் பட்டியலாகக் கிடைக்கும். அதில் கணையாழியைக் காணலாம். அல்லதுhttp://www.magzter.com/search_magazine.php?search_magazine=kanaiyazhi&x=24&y=13 சென்று பாருங்கள்.
இங்கே மாத சஞ்சிகை, 3 மாத கட்டணம், 6 மாதக் கட்டணம், 1 வருட சந்தா கட்டணம் என பிரித்திருக்கும். நீங்கள் விரும்பும் சந்தா விவரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
க்ரேடிட் கார்ட் கட்டண அமைப்பு இங்கே வழங்கப்பட்டுள்ளது.பொதுவாகப் பிரபலமான Visa, mastercard, AmEx, Discover JCB ஏதாகினும் ஒன்றை நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால் சுலபமாக கட்டணத்தைச் செலுத்தி இதழை பெற்றுக் கொள்ளலாம்.

கணையாழி இணைய இதழாக வருவதால்  தமிழகம் மட்டுமன்றி அயல் நாட்டில் வாழும் தமிழர்களும் சஞ்சிகையை வாங்கிப் படித்து பயன்பெற முடியும் என்ற நம்பிக்கையைக் கணையாழி  ஆசிரியர் குழுவினர் கொண்டிருக்கின்றோம்.  உங்கள் ஆதரவு கணையாழி இணைய இதழ் தொடர்ந்து வலம் வர உதவும்.

இச்செய்தியை நீங்கள் வாசிப்பதோடு உங்கள் நண்பர்கள் வட்டாரத்திலும் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். 

அச்சு இதழாகவும் இணைய இதழாகவும் வெளிவரும் கணையாழியை வாங்கி வாசித்து மகிழுங்கள்.

கணையாழி ஆசிரியர் குழு!

Wednesday, April 30, 2014

மே 2014 - கணையாழி

வணக்கம்.

கணையாழி இலக்கிய இதழ் வாசகர்களுக்கு....
          ......................மே மாத கணையாழி வெளிவந்து விட்டது. 

இம்மாதம் முதல் கணையாழி ஆசிரியர் குழுவில் பேராசிரியர். டாக்டர்.நா.கண்ணன் அவர்களும் இணைகின்றார்கள் என்ற செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் மகிழ்கின்றேன்.

தமிழகம் தவிர்த்த அயல்நாடுகளில் வசிப்பவர்கள் மின்னூலாகவும் இணையத்தில் சந்தாதாரராகி தரவிறக்கி உங்கள் செல்போன், ஐபேட், கிண்டல் போன்ற மின்னூல் வாசிப்புக் கருவிகளில் வாசிக்கலாம். 

இந்த இணையச் சேவையைப் பெற நீங்கள் செய்ய வேண்டியவை:
http://www.magzter.com/ வலைப்பக்கம் சென்று அங்கே உங்களுக்கு ஒரு உறுப்பினர் கணக்கை உருவாக்குங்கள்
கணையாழி இதழை தேடு பகுதியில் kanaiyazhi என தட்டச்சு செய்து தேடுங்கள் அல்லது tamil  என தட்டச்சு செய்து தேடினால் ஏனைய தமிழ் சஞ்சிகைகளும் பட்டியலாகக் கிடைக்கும். அதில் கணையாழியைக் காணலாம். அல்லதுhttp://www.magzter.com/search_magazine.php?search_magazine=kanaiyazhi&x=24&y=13சென்று பாருங்கள்.
இங்கே மாத சஞ்சிகை, 3 மாத கட்டணம், 6 மாதக் கட்டணம், 1 வருட சந்தா கட்டணம் என பிரித்திருக்கும். நீங்கள் விரும்பும் சந்தா விவரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
க்ரேடிட் கார்ட் கட்டண அமைப்பு இங்கே வழங்கப்பட்டுள்ளது.பொதுவாகப் பிரபலமான Visa, mastercard, AmEx, Discover JCB ஏதாகினும் ஒன்றை நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால் சுலபமாக கட்டணத்தைச் செலுத்தி இதழை பெற்றுக் கொள்ளலாம்.

கணையாழி இணைய இதழாக வருவதால்  தமிழகம் மட்டுமன்றி அயல் நாட்டில் வாழும் தமிழர்களும் சஞ்சிகையை வாங்கிப் படித்து பயன்பெற முடியும் என்ற நம்பிக்கையைக் கணையாழி  ஆசிரியர் குழுவினர் கொண்டிருக்கின்றோம்.  உங்கள் ஆதரவு கணையாழி இணைய இதழ் தொடர்ந்து வலம் வர உதவும்.

இச்செய்தியை நீங்கள் வாசிப்பதோடு உங்கள் நண்பர்கள் வட்டாரத்திலும் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். 

அச்சு இதழாகவும் இணைய இதழாகவும் வெளிவரும் கணையாழியை வாங்கி வாசித்து மகிழுங்கள்.

கணையாழி ஆசிரியர் குழு!

Monday, March 31, 2014

ஏப்ரல் 2014 - கணையாழி

வணக்கம்.

கணையாழி இலக்கிய இதழ் வாசகர்களுக்கு....
          ......................ஏப்ரல் மாத கணையாழி வெளிவந்து விட்டது. 

Inline image 1

தமிழகம் தவிர்த்த அயல்நாடுகளில் வசிப்பவர்கள் மின்னூலாகவும் இணையத்தில் சந்தாதாரராகி தரவிறக்கி உங்கள் செல்போன், ஐபேட், கிண்டல் போன்ற மின்னூல் வாசிப்புக் கருவிகளில் வாசிக்கலாம். 

இந்த இணையச் சேவையைப் பெற நீங்கள் செய்ய வேண்டியவை:
  • http://www.magzter.com/ வலைப்பக்கம் சென்று அங்கே உங்களுக்கு ஒரு உறுப்பினர் கணக்கை உருவாக்குங்கள்
  • கணையாழி இதழை தேடு பகுதியில் kanaiyazhi என தட்டச்சு செய்து தேடுங்கள் அல்லது tamil  என தட்டச்சு செய்து தேடினால் ஏனைய தமிழ் சஞ்சிகைகளும் பட்டியலாகக் கிடைக்கும். அதில் கணையாழியைக் காணலாம். அல்லது http://www.magzter.com/search_magazine.php?search_magazine=kanaiyazhi&x=24&y=13 சென்று பாருங்கள்.
  • இங்கே மாத சஞ்சிகை, 3 மாத கட்டணம், 6 மாதக் கட்டணம், 1 வருட சந்தா கட்டணம் என பிரித்திருக்கும். நீங்கள் விரும்பும் சந்தா விவரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
  • க்ரேடிட் கார்ட் கட்டண அமைப்பு இங்கே வழங்கப்பட்டுள்ளது.பொதுவாகப் பிரபலமான Visa, mastercard, AmEx, Discover JCB ஏதாகினும் ஒன்றை நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால் சுலபமாக கட்டணத்தைச் செலுத்தி இதழை பெற்றுக் கொள்ளலாம்.

கணையாழி இணைய இதழாக வருவதால்  தமிழகம் மட்டுமன்றி அயல் நாட்டில் வாழும் தமிழர்களும் சஞ்சிகையை வாங்கிப் படித்து பயன்பெற முடியும் என்ற நம்பிக்கையைக் கணையாழி  ஆசிரியர் குழுவினர் கொண்டிருக்கின்றோம்.  உங்கள் ஆதரவு கணையாழி இணைய இதழ் தொடர்ந்து வலம் வர உதவும்.

இச்செய்தியை நீங்கள் வாசிப்பதோடு உங்கள் நண்பர்கள் வட்டாரத்திலும் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். 

அச்சு இதழாகவும் இணைய இதழாகவும் வெளிவரும் கணையாழியை வாங்கி வாசித்து மகிழுங்கள்.

கணையாழி ஆசிரியர் குழு!

Saturday, March 1, 2014

மார்ச் 2014 - கணையாழி

கணையாழி இலக்கிய இதழ் வாசகர்களுக்கு....
          ......................மார்ச் மாத கணையாழி வெளிவந்து விட்டது. 

Inline image 1

அச்சு இதழாகவும் இணைய இதழாகவும் வெளிவரும் கணையாழியை வாங்கி வாசித்து மகிழுங்கள்.

Wednesday, August 21, 2013

கணையாழி இணைய இதழாக...

வணக்கம்.

அச்சு இதழாக வெளி வந்து கொண்டிருந்த கணையாழியை இணையத்தில் சோதனை முயற்சியாக emagaz.in நிறுவனத்துடன் இணைந்து இணைய இதழாக கொண்டு வந்தோம். ஆன்லைன் மின்னூலாக மட்டுமே கணையாழியை வாசிக்கும் வாய்ப்பினை இது வழங்கிக்கொண்டிருந்தது.

முழுமையான இணைய இதழின் தேவையறிந்து கணினிக்குத் தரவிறக்கி தேவைப்படும் நேரத்தில் வாசிக்கும் வகையில் தற்சமயம் கணையாழியை http://www.magzter.com/ வலைப்பக்கத்தில் இணைய இதழாக வெளியிடுகின்றோம் என்ற தகவலைப் பகிர்ந்து கொள்வதில் கணையாழி  ஆசிரியர் குழு மகிழ்கின்றோம்.

இதன் வழி கணையாழியை இணைய இதழாக வாசிக்க விரும்புபவர்கள் இவ்வலைப்பக்கம் சென்று  தங்கள் தேவைக்கேற்ற மின்னூல் வாசிப்பு கருவிக்கேற்ற வகையில் கணையாழியை தரவிறக்கி வாசிக்கலாம். கணையாழி விண்டோஸ், iPhone, iPad, Android, என முக்கிய மின்னூல் வாசிப்புக் கருவிகளுக்கேற்ற வடிவத்தில் இங்கு வழங்கப்படுகின்றது.

இந்தச் சேவையைப் பெற நீங்கள் செய்ய வேண்டியவை:

  1. http://www.magzter.com/ வலைப்பக்கம் சென்று அங்கே உங்களுக்கு ஒரு உறுப்பினர் கணக்கை உருவாக்குங்கள்
  2. கணையாழி இதழை தேடு பகுதியில் kanaiyazhi என தட்டச்சு செய்து தேடுங்கள் அல்லது tamil  என தட்டச்சு செய்து தேடினால் ஏனைய தமிழ் சஞ்சிகைகளும் பட்டியலாகக் கிடைக்கும். அதில் கணையாழியைக் காணலாம். அல்லது http://www.magzter.com/search_magazine.php?search_magazine=kanaiyazhi&x=24&y=13 சென்று பாருங்கள்.
  3. இங்கே மாத சஞ்சிகை, 3 மாத கட்டணம், 6 மாதக் கட்டணம், 1 வருட சந்தா கட்டணம் என பிரித்திருக்கும். நீங்கள் விரும்பும் சந்தா விவரத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்.
  4. க்ரேடிட் கார்ட் கட்டண அமைப்பு இங்கே வழங்கப்பட்டுள்ளது.பொதுவாகப் பிரபலமான Visa, mastercard, AmEx, Discover JCB ஏதாகினும் ஒன்றை நீங்கள் பயன்படுத்துபவராக இருந்தால் சுலபமாக கட்டணத்தைச் செலுத்தி இதழை பெற்றுக் கொள்ளலாம்.

கணையாழி இணைய இதழாக வருவதால்  தமிழகம் மட்டுமன்றி அயல் நாட்டில் வாழும் தமிழர்களும் சஞ்சிகையை வாங்கிப் படித்து பயன்பெற முடியும் என்ற நம்பிக்கையைக் கணையாழி  ஆசிரியர் குழுவினர் கொண்டிருக்கின்றோம்.  உங்கள் ஆதரவு கணையாழி இணைய இதழ் தொடர்ந்து வலம் வர உதவும்.

இச்செய்தியை நீங்கள் வாசிப்பதோடு உங்கள் நண்பர்கள் வட்டாரத்திலும் பகிர்ந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

அன்புடன்
கணையாழி ஆசிரியர் குழு

Friday, July 6, 2012

கணையாழி இணைய இதழ் இன்று முதல் வாசகர்களுக்காக..!

நண்பர்களே,

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மீண்டும் கணையாழி அச்சு இதழாக வெளிவரத் தொடங்கியமை இலக்கிய உலகத்தைச் சேர்ந்தவர்கள் பலருக்கும் மகிழ்ச்சியளித்த ஒரு விஷயமாகும். இப்போது உலகின் எல்லா நாடுகளிலும் உள்ள தமிழ் பேசும் இலக்கிய ஆர்வலர்களுக்காக இணைய இதழாகவும் புதி வடிவம் எடுத்துள்ளது கணையாழி. இம்மாத இதழை இணையத்தில் வாங்கி வாசிக்கும் வகையில் இணையப் பதிப்பை கணையாழி ஆசிரியர் குழு இன்று முதல் தொடங்கியுள்ளது.

இணைய இதழின் சந்தா விபரங்கள்:

  • மாத இதழ் சந்தா - $2.50
  • 6 மாத இதழ்களின் சந்தா - $12.50
  • 1 வருட இதழ்களின் சந்தா - $20.00
  • 2 வருட இதழ்களின் சந்தா - $38.00
  • 5 வருட இதழ்களின் சந்தா - $90.00

இணைய இதழை http://kanaiyazhi.emagaz.in என்ற பக்கத்திலிருந்து வாசிக்கலாம்!!

இணையத்தில் வலம் வரும் கணையாழிக்கு உங்கள் ஆதரவு மேலும் வளம் சேர்க்கும். இச்செய்தியை உங்கள் நண்பர்கள் வட்டாரத்திலும் ஏனையை மடலாடற் குழுக்களிலும் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றேன்

கணையாழி இணைய இதழாகவும் வெளிவரும் இச்சமயத்தில் திண்ணை இணைய இதழில் வே.சபாநாயகம் எழுதி அண்மையில் வெளிவந்த ஒரு கட்டுரையையும் பகிர்ந்து கொள்வது பொறுத்தமாக இருக்கும் என்பதால் இங்கே இக்கட்டுரையை வழங்குகின்றேன். வாசித்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்ளலாம்.

அன்புடன்
சுபா

Thursday, July 5, 2012

கணையாழியின் கதை

வே.சபாநாயகம்

        இது அசோகவனத்தில் சந்தித்து அனுமன் பெற்ற கணையாழியின் கதை அல்ல. இலக்கிய உலகில் தனக்கென சிறப்பான ஒரு இடத்தை உருவாக்கி வைத்துள்ள கலை இலக்கியத் திங்கள் இதழான 'கணையாழி' யின் தோற்றம் முதல் இன்றைய வளர்ச்சி வரையிலான ஒரு 'திரும்பிப் பார்த்தல்'.

        'புது தில்லி பொழுது போகாத ஒரு மாலை வேளையில், நண்பர் ரங்கராஜனுடன் அரட்டை அடித்துக் கொண்டிருந்த போது, பத்திரிகை ஆரம்பிக்கும் யோசனை தோன்றியது.பேஷாகச் செய்து விடலாம் என்று சொன்ன ரங்கராஜன் தன் பங்குக்கு ஒவ்வொரு இதழிலும் எழுதுவதாக உறுதி அளித்தார். தமிழில் வெளிவந்து கொண்டிருந்த பத்திரிகைகளிலிருந்து வித்தியாசமாக இருக்க வேண்டும். அரசியல், ஆன்மீகம், மருத்துவம், அத்துடன் கொஞ்சம் இலக்கியம் என்று முடிவாயிற்று. ஆங்கிலப் பதிதிரிகைகளின் தரத்தில் அறிவார்த்தமாக இருக்க வேண்டும். ஜோக்குகள் கூடாது. 'கலைமகள்' போல் ஒரு தமிழ்ப் பெயராக இருக்க வேண்டும் என்று யோசித்து 'கணையாழி'என்று பெயர் வைத்தேன்' என்று 'கணையாழி' பத்திரிகையின் நதி மூலத்தை, அமெரிக்கப் பத்திரிகையான 'நியூயார்க் டைம்ஸ்' பத்திரிகையின் தில்லி நிருபராகப் பணியாற்றி வந்த திரு.கி.கஸ்தூரிரங்கன்  கூறியிருக்கிறார்.

        டெம்மி அளவில் 24 பக்கம் கொண்டதாக 40 காசு விலையில், ஜூலை 1965 என்று முதல் பக்கத்தில் அச்சடித்து வந்த முதல் 'கணையாழி' ஆகஸ்ட் 15ல் வெளி வந்தது. தில்லிக்கு அப்போது வந்திருந்த ஜெயகாந்தனுடன் ஒரு பேட்டி, கலைமகளில் அரசியல் கட்டுரை எழுதி வந்த கே.சீனிவாசன் கட்டுரை, ஓரிரண்டு கதைகள், சினிமா, நாடகம் பற்றிய தகவல்கள் விமர்சனங்கள், ந.பிச்சமூர்த்தி கவிதைகள் பற்றி ஒரு அலசல் என்றெல்லாம் அதில் இருந்தன. அட்டைப் படமாக இந்தியத் தேசம், அதற்குள் நேருவும் சாஸ்திரியும் - அதுதான் அட்டைப்படக் கட்டுரையும். .தில்லியில் அபோது தமிழ் அச்சகம் இல்லாததால் சென்னை வந்து ஒருமாதம் தங்கி அச்சகமே கதி என்று கிடந்து 2000 பிரதிகள் அச்சடித்து எடுத்துக்கொண்டு போய், பிரதிகளைப் பாதிக்கு மேல் விற்க முடியாமல், 500 பிரதிகளை இலவசமாக அனுப்பி மிகுந்த சிரமங்களுக்கு ஆளானாலும் படித்தவர்கள் 'நன்றாக இருக்கிறது, வித்தியாசமாக இருக்கிறது, நல்ல எதிர்காலம் இருக்கிறது' என்று பாராட்டியதால், உற்சாகம் குறையவில்லை என்று எழுதுகிறார் கி.க. ஆரம்பத்தில் அசோகமித்திரனின் பங்களிப்பு கி.கவுக்குப் பெரிதும் துணையக இருந்தது.கணையாழியின் பொறுப்பாசிரியராக சென்னையிலிலுருந்து அவர் செயல்பட்டார். மிகவும் பொறுப்புடன், பிரதிபலனை எதிர்பாராது மாதாமாதம் 'கணையாழி'யை அச்சடித்து அனுப்பி வைத்தார்.

        பிறகு கொஞ்சம் கொஞ்சமாக சந்தாக்கள் வரத் தொடங்கியுள்ளன. விற்பனை ,உற்சாகம் தராதிருந்தும் எழுத்தாளர்களின் ஆதரவு பெருகியதால் கி.க உற்சாகமாகவே தொடர்ந்தார். 'தில்லி எழுத்தாளர்கள் சுப்புடு,'கடுகு' என்கிற பி.எஸ்.ரங்கநாதன், பூர்ணம் விஸ்வநாதன், லா.சு.ரங்கராஜன், இ.பா. , தி.ஜானகிராமன், என்.எஸ்.ஜகந்நாதன், கே.எஸ்.சீனிவாசன் என்று ஒரு ஐந்து நட்சத்திரத் தரத்தில் படைப்புகள் கணையாழியில் வெளிவரத் தொடங்கின' என்று பெருமிதப்படுகிறார் கி.க. இளம் எழுத்தாளர்கள் ஆதவன், சம்பத், மாலன், பாலகுமாரன் ஆகியோர் கணையாழி மூலம் முத்திரை பதித்தார்கள். ஞானக்கூத்தன், எஸ.வைத்தீஸ்வரன்,தி.சொ வேணுகோபாலன், சி.மணி முதலான 'எழுத்து'க்கவிஞர்கள் புதுக்கவிதை எழுதினார்கள்.அசோகமித்திரனின்  கதை, சுஜதாவின் கடைசிப் பக்கம், என்.எஸ் ஜெயின் 'என்னைக்கேட்டால்', சுப்புடுவின் சங்கீத வித்வான்கள் அறிமுகம் போன்றவை ஒவ்வொரு இதழையும் சுவாரஸ்யப்படுத்தின.இந்திராகாந்தி,மொரார்ஜி, காமராஜ், அண்ணா, கருணாநிதி, பெரியார் போன்ற பெரிய அரசியல் புள்ளிகளுடன் நேர்முகப்பேட்டிகள் மூலம் 'கணையாழி'க்கு ஒரு அந்தஸ்து ஏற்படத் தொடங்கியது.பின்னாளில் அரசியல் கைவிடப்பட்டு முழுக்க முழுக்க இலக்கிய ஏடாகப் பரிணாமம் கொண்டது.

        முப்பது ஆண்டுகள் நடத்தி பல சாதனைகள் செய்தபின், 'கணையாழி'யின் பொருளாதாரமும் கி.கவின்  உடல் நிலையும் நலிந்துபோன நிலையில் யாரிடமாவது அந்த இனிய சுமையைத் தோள் மாற்றிவிட விரும்பினார். அப்போது தமன்பிரகாஷ், சுவாமிநாதன், ம.ராஜேந்திரன் ஆகிய நண்பர்கள் தங்களது 'தசரா' அறக்கட்டளை மூலம் எடுத்து நடத்த முன் வந்தபோது மிகுந்த மகிழ்ச்சியோடு கி.க அவர்களிடம் 'கணையாழி'யை ஒப்படைத்தார். இதனை மிகுந்த உணர்ச்சிப்பெருக்கோடு, 1996ல் நடைபெற்ற 'கணையாழி'யின் 31வது ஆண்டு தொடக்கவிழாவின் போது, 'கணையாழி'யைத் தன் வளர்ப்பு மகளாக வர்ணித்து இந்தக் கல்யாண விழாவில் தான் மகிழ்ச்சியோடு இருப்பதாகவும், கணையாழியின் சஷ்டியப்தபூர்த்தி விழாவையும் தான் ஆவலோடு எதிர் பார்ப்பதாகவும் குறிப்பிட்டார். ஆனால் பதினைந்தாண்டுகளுக்கு மேலாக சிறப்பாக நடத்திய பின் 2006ல் ' தொடர்ந்து நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டது. திரும்பவும் 2011 மே முதல் கவிதா சொக்கலிங்கம் தனது 'கவிதா பதிப்பகம்' மூலம் வெளியிடும் பொறுப்பை ஏற்க, தசரா 'கணையாழி'யை புதிய பாய்ச்சலுடன் நடத்தத் தொடங்கியது. ஒராண்டு வெற்றிகரமாக நடந்த பிறகு தற்போது மே - '12 முதல் திரு.ம.ராஜேந்திரனின் முழுப்பொறுப்பில் வெளிவருகிறது.

        'கணையாழி', கி.க பொறுப்பில் வெளியானபோது பல சோதனை முயற்சிகளைச் செய்து சாதனைகள் பல நிகழ்த்தி இலக்கிய ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடத்தைப் பெற்றது. புதிய இளம் எழுத்தாளர்களைக் 'கணையாழி'யில் எழுத வைத்து இன்றைய நட்சத்திர எழுத்தாளர்கள் பலரை உருவாக்கியதை முதல் சாதனையாகச் சொல்லலாம். வாசகர் கடிதத்தை இலக்கிய அந்தஸ்க்கு உயர்த்தியதை அடுத்துச் சொல்லலாம். புதியவர்களும் புகழ்பெற்ற மூத்த படைப்பாளிகளும் வாசகர் கடிதம் மூலம் பல சிறப்பான விவாதங்களை நடத்திப் பரபரப்பை ஏற்படுத்தினர். இலக்கியத்திலும் இட ஒதுக்கீடு கேட்டு கவிஞர் பழமலய் குரலெழப்ப  சு.சமுத்திரம்  போன்றவர்கள் வழி மொழிந்ததும், என்.எஸ்.ஜகந்நாதனின் கட்டுரை ஒன்றில் மணிப்பிரவாள நடை பற்றி எழுதிய கருத்துக்களுக்கு தி.க.சி எதிர் வினையாற்றியதும் இன்றும் நினைவில் நிற்பவை.

        அடுத்து கணையாழிக் கதைகளும் கவிதைகளும் தனித் தொகுப்புகளாக வருமளவுக்குச் சிறப்பாக இருந்ததைக் குறிப்பிடலாம். கணையாழியில்தான் குறுநாவல்களுக்கு ஒரு இலக்கிய அந்தஸ்து ஏற்பட்டது என்றால் அது மிகை இல்லை. அதிலும் குறிப்பாக 'தி.ஜானகிராமன் நினைவுக் குறுநாவல் போட்டிகளில் வெளியானவை அத்தனையும் முத்துக்கள் என்றே சொல்லலாம். மேலும் இந்திரா பார்த்தசாரதி, தி.ஜானகிராமன், அசோகமித்திரன் வண்ணநிலவன் போன்றோரது அற்புதமான தொடர் நாவல்களும் 'கணையாழி'க்குப் பெருமை சேர்த்தன. 'கணையாழி' கிடைத்ததும் முதலில் கடைசிப்பக்கத்தைப் பார்க்குமளவுக்குப் பரபரப்பை ஊட்டியவர் 'ஸ்ரீரங்கம் எஸ்.ஆர்' ஆக ஆரம்ப காலங்களில் அறியப்பட்ட சுஜாதா அவர்கள். பல சித்திர விசித்திரங்களை சோதனை முயற்சிகளாக மேற்கொண்டு எழுத்தாளனை ஒரு நட்சத்திர அந்தஸ்க்கு உயர்த்திய அவரது சாதனை 'கணையாழி'யில்தான் நிகழ்ந்தது. புத்திலக்கியத்துடன் பழைய காவிய நயங்களைக் காட்டும் கே.எஸ்.சீனிவாசன் அவர்களது 'காவ்ய ராமாயாணம்' தொடரையும் வெளியிட்டது கணையாழி. 'முஸ்தாபா' என்ற பெயரில் யார் என்று தெரியாத மர்மத்தில் வாசகரை ஆழ்த்திய கி.க அவர்களது 'உள்ளது உள்ளபடி..' ஒவ்வொரு இதழையும் ஆவலுடன் எதிர்பார்க்க வைத்தது.  காலஞ்சென்ற அற்புதப் படைப்பாளி ஜெயந்தன் தனது 'நினைக்கப்படும்' நாடகத்தின் மூலம் தன்னை எழுத்துலகம் திரும்பிப் பார்க்கச் செய்தார். 'கணையாழி'யின் முகத்துக்குப் புதியதொரு பொலிவினை இத்தகைய பதிவுகள் கொடுத்தன. கிருஷ்ணன்நம்பியின் புகழ் பெற்ற சிறுகதையான 'மருமகள் வாக்கு' 'கணையாழி'யில்தான் வெளியாயிற்று, மற்றும் இதழ்தோறும் வாசகர்களை ஈர்த்த சுந்தரராமசாமி அவர்களது கேள்வி-பதிலும், கே.சீனிவாசன் அவர்களது கூர்மையான அரசியல் கட்டுரைகளும், திருப்பூர் கிருஷ்ணன் அவர்களது சுவாரஸ்யமான 'இலக்கிய விசாரமு'ம் குறிப்பிடத்தக்கவை. இன்னும் 'கணையாழி'க்குப் பெருமை சேர்த்தவர்களும், 'கணையாழி'யால் வெளிச்சம் பெற்றவர்களும் வழங்கிய அரிய படைப்புகள் பற்றி எழுதி மாளாது.

        தில்லியில் கி.க வுக்கு உதவியாக திரு லா.சு.ரங்கராஜன் - அசோகமித்திரன் போலவே கணையாழியின் பொறுப்பாசிரியராக சிறப்பாகப் பணியாற்றினார். கி.க சென்னைக்கு வந்ததும் சி.அண்ணாமலை என்பவர் உதவியாசிரியரகவும் இ.பா. கௌரவ ஆசிரியராகவும் கணையாழியை நடத்தினார்கள். இ.பா இன்றுவரை கணையாழியின் சிறப்பாசிரியராகத் தொடர்கிறார்.

        கணையாழியின் வெள்ளி விழா ஆண்டில் 'கணையாழி-25' என்ற தலைப்பில் கவிஞர் ஞானக்ககூத்தன் தொடர் எழுதி வந்தார். 30 ஆண்டுகள் முடிந்த போது, தசராவின் கணையாழியில் கடந்த காலப் பதிவுகளை நினைவூட்டும் வகையில் 'கணையாழியின் பரிணாம வனர்ர்ச்சி' என்ற தலைப்பில் வே.சபாநாயகம்  எழுதிவந்தார். 1997 பிப்ரவரியில் 'கணையாழி'யின் முதல் இதழ் முதல் இணையத்தில் பதிவு செய்து வைக்க, அரவிந்தன், கவிஞர்கனிமொழி மூலம் கி.க முயன்றார். கொஞ்சம் பதிவானபிறகு ஏனோ அம்முயற்சி கைவிடப்பட்டது. 30 ஆண்டுகாலத்தில் கணையாழியில் வந்த சிறப்பம்சங்களைக் கொண்ட கணையாழி தொகுப்பைக்   கஸ்தூரி ரங்கன்  வே.சபாநாயகம், இ,பா, என்.எஸ்.ஜெ மூலம் நான்கு தொகுதிகளாகக் 'கணையாழி களஞ்சியம்' என்ற தலைப்பில் கலைஞன் பதிப்பக வெளியீடாகக்  கொண்டு வந்ததார்..

        31ஆவது ஆண்டுமலர் வெளியீட்டைத் 'தசரா' ஒரு விழாவாகவே கொண்டாடியது. இலக்கிய அன்பர்களாலும் படைப்பாளிகளாலும் நிரம்பி வழிந்த அரங்கம், 'தசரா'வுக்குக் கிடைத்த அமோக வரவேற்பைக் காட்டியது. அது 'தசரா'வுக்கு 'கணையாழி'யை மிகுந்த உற்சாகத்துடன் தொடர வழி வகுத்தது.

        'தசரா' பொறுப்பில் வந்த பிறகும் கணையாழிக்குப் பெருமை சேர்த்த அதன் ஆஸ்தான எழுத்தாளர்கள் சுஜாதா. என்.எஸ்.ஜெ, இ.பா. கி.க அசோகமித்திரன் எல்லோரும் தொடர்ந்து கணையாழியில் எழுதி வந்தார்கள்.  சுஜாதா கணையாழியில் எழுதாமல்  போனதும். அவரது கடைசிப் பக்கத்தை தோழர் தியாகு போன்றோர்களின் தொடர்கள் அணி செய்தன. பழைய எழுத்தாளர்கள் ந.முத்துசாமி, பா.செயப்பிரகாசம், சா.கந்தசாமி. இரா.முருகன், பிரபஞ்சன், த.பழமலய், அறிவுமதி, கல்யாண்ஜி, புவியரசு போன்றோரும் தொடர்ந்து எழுதினார்கள். வெங்கட் சாமிநாதன், கே.எஸ் சுப்பிரமணியன், மார்க்ஸ் போன்றோரின் விமர்சனங்களும் வெளியாயின. பழைய கணையாழியில் துடிப்பான இளைஞர்கள் இடம் பெற்றது போலவே இப்போதும் பின்னாளில் புகழ் பெற்ற புதிய  படைப்பாளர்கள்  கவிஞர் நா.முத்துகுமார், யூமா வாசுகி, பாப்லோ அறிவுக்குயில், அழகிய பெரியவன். இளம்பிறை, அ.வெண்ணிலா , நிஷார் மற்றும் கணையாழியில் இடம் கிடைக்காதா என்று ஏங்கிக்கொண்டிருந்த ஆரம்ப எழுத்தாளர்களும் இடம் பெற்றார்கள். ஈழத்து எழுத்தாளர்கள் கார்த்திகேசு சிவத்தம்பி, அ.முத்துலிங்கம், மாத்தளைசோமு, எஸ்.பொ, தேவகாந்தன் ஆகியோரது படைப்புகளும் தொடர்ந்து இடம் பெற்றன.

        இதழ் தோறும் நிறைய புதிய நூல்களின் அறிமுகமும் பிரபஞ்சன், சா.கந்தசாமி ஆகியோர் தாம் படித்த நூல்களை விமர்சித்ததும் வாசகர்களின் வரவேற்பைப் பெற்றன. 'இந்த நூற்றாண்டின் எனக்குப்பிடித்த சிறந்த கதை' என்ற தலைப்பில் பல மூத்த எழுத்தளர்கள் எழுதினார்கள். தி.க.சி யின் 'காலத்தின் குரல்', தோழர் தியாகுவின் 'மார்க்சின் தூரிகை' போன்ற தொடர் கட்டுரைகள் பாராட்டுகள் பெற்றன.

        மீண்டும் குறுநாவல் போட்டிகள் மூலம் வெளியான குறுநாவல்கள் இலக்கியத்தரம் வாய்ந்தனவாய் இருந்தன.ஓவியர்கள் ஆதிமூலம், மருது இவர்களுடன் புதியவர்களான புகழேந்தி, செல்வம், மாரிமுத்து ஆகியோர் கணையாழியைத் தொடர்ந்து அழகு படுத்தினர். கி.க வின் 'எட்டுத்திக்கும்' அரசியல், கலை, இலக்கியம் ஆன்மீகம் என்று பல துறைகளைப் பற்றியும் சாரமான தகவல்களைத் தந்தது. ம.ராஜேந்திரன் தலையங்கம் மட்டுமின்றி, 'நினைக்கப்படும்' என்ற தலைப்பில்  'மரன்' என்ற பெயரில்  தொடர் எழுதி வந்தார். மற்றும் 'படித்துப் பாருங்கள்' என்று பிரபஞ்சன் பல சிறந்த நூல்களைஅறிமுகப்படுத்தியதும் 'பார்வை' என்ற தலைப்பில் 'பார்வையளர்' என்பவரின் பதிவுகளும், சினிமா பற்றி அம்ஷ்குமார், எஸ்.சாமிநாதன் ஆகியோரின் ஆக்கபூர்வமான விமர்சனங்களும் வாசகர்களுக்கு விருந்தாய் அமைந்தன. வெங்கட் சாமிநாதன் போன்றோரின் நூல்விமர்சனங்களும் குறிப்பிடத் தக்கன. வாசகர் கடிதங்கள் 'எதிரொலி', 'எதிர்வினை' என்ற பெயர்களில் பாராட்டியும் விமர்சித்தும் 'கணையாழி'க்கு உற்சாகமூட்டின.

        சிறப்பான நேர்காணல்களும், பேட்டிகளும் இக்கால கட்டத்தில் வெளியாயின. முதல் இதழில் பேட்டி காணப்பட்ட ஜெயகாந்தன் 'தசரா' பொறுப்பேற்றபோதும் ை பேட்டி காணப்பட்டார்.  ஒவ்வொரு தடவையும் அவரது பேட்டிகள் பல புதிய தகவல்களைக் கொண்டதாய் இருந்தன. மற்றும் மறுபிரசுரம் ஆன ஆர்.சூடாமணி, இந்திரா கோஸ்வாமி ஆகியோரது பேட்டிகளும், புதிய இளம் படைப்பாளிகளான கண்மணி குணசேகரன், இளம்பிறை பொன்றோரது நேர்காணல்களும் கணையாழியின் பாரபட்ச மற்ற பார்வையை உணர்த்தின.

         காலஞ்சென்ற முத்திரை பதித்த படைப்பாளிகள் கு.ப.ரா,  பு.பி,  சி.சு.செ, மௌனி, வையாபுரிப்பிள்ளை எனப் பலரது நினைவு தினங்களையொட்டி அட்டையில் அவர்களது படங்களை வெளியிட்டு அவர்களைப்பற்றிய கட்டுரைகளையும் வெளியிட்டு கணையாழி கௌரவவித்தது. பல்வேறு சிறப்பிதழ்களுடன் மலேசிய, ஆஸ்திரேலிய, கனடா சிறப்பிதழ்களையும் கொண்டு வந்து பாராட்டுக்குரியதாயிற்று.

        இக்கால கட்டத்தில் பாவண்ணன். ஜெயமோகன், ம.ந.ராமசாமி, அசோகமித்திரன். பா.செயப்பிரகாசம், ஸிந்துஜா. ம.ரா, விழி.பா இதயவேந்தன்.கீரனூர் ஜாகிர்ராஜா எனப் பல பழைய புதிய எழுத்தளர்களின் கதைகள் பிரசரமாயின. எஸ். வைத்தீஸ்வரன், பழமலய், இளம்பிறை போன்றோர் நிறைய கவிதைகளை எழுதினார்கள். வெங்கட் சாமிநாதன், கே.எஸ், சுப்பிரமணியன், ஆர். நடராஜன் இன்னும் பல திறனாய்வாளர்களது சிறந்த கட்டுரைகள் வெளிவந்தன. பதிப்பாளர் தமன்பிரகாஷ் சட்டசபைத்தேர்தல் பற்றி எழுதிய கட்டுரை பலரது பாராட்டுக்கு உள்ளாயிற்று.

        ஆசிரியர் மய்திலி ராஜந்திரனும்  சில  கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் தொடர்கிறார். அந்த இடைக்காலத்தில் பா.இராம்ஜி என்பவர் பொறுப்பிலும் பின்னர் ஆசிரியர் குழுவின் பொறுப்பிலும் கணையாழி தொடர்ந்தது. கவிஞர் யுகபாரதி உதவியாசிரியராகச் சில ஆண்டுகள் இருந்திருக்கிறார்.

        1995 முதல் 2006 வரை பதினாறு ஆண்டுகள் இவ்வளவு சாதனைகளை நிகழ்த்திய கணையாழி 2006 செப்டம்பர் இதழோடு தடைபட்டு நின்று போயிருந்தது , கணையாழி அன்பர்களுக்கும், இலக்கியப் படைப்பாளிகளுக்கும் பெரிய ஏமாற்றத்தை அளித்தது. மீண்டும் அது ஏப்ரல் 2011ல் புத்துயிர் பெற்றபோது இலக்கிய உலகுக்குப் பெரும் ஆறுதல்  ஏற்பட்டது.

        கடந்த ஓராண்டிலும் கணையாழி தனது ஆரம்ப காலத்தை நினைவூட்டுவதாய், நவீன உள்ளடக்கங்களுடன் சிறப்பான பதிவுகளை வெளியிட்டுள்ளது. இ.பா .இப்போதும் சிறப்பாசிரியர் என்பதோடு, சுஜாதா போல கடைசி பக்கங்களில் பழைய இலக்கியங்களிலிருந்து அன்றாட நடப்பை ஒட்டியும் நல்ல விஷயங்களை அளித்து வருகிறார். பாரவி, வாசந்தி,  அசோகமித்திரன், சா.கந்தசாமி, எஸ்.சங்கர நாராயண் போன்றோரது கதைகளும், எஸ்.வைத்தீஸ்வரன், நீலமணி, ஈரோடு தமிழன்பன் போன்ற மூத்த கவிஞர்களின் கவிதைகளும், தமிழவன், மு.ராமசாமி, கி.நாச்சிமுத்து, அன்பாதவன் போன்றோரது கட்டுரைகளும் மீண்டும் கணையாழிக்குக் கனம் சேர்த்துள்ளன. நரசய்யாவின் 'காலம் கொன்ற விருந்து' அரிய ஆவணங்களை வாசகர் பார்வைக்கு  கொண்டு வந்தது. மரன் என்ற பெயரில் 'நினைக்கப்படும்' தொடர் எழுதிய ம.ரா. இப்பொது நடுப்பக்கத்தில் 'காணப்படும்' என்ற தலைப்பில் தான் கலந்து கொண்ட இலக்கிய விழாக்கள் பற்றியும் அங்கு, தான் கண்டவை பற்றியும் சுவாரஸ்யமாக எழுதி வருகிறார்.

    கஸ்தூரிரங்கன் காலத்திலேயே கணையாழியில் எழுதிவந்த ம.ராஜேந்திரன்,தசரா கணையாழியிலும் கவிதா வெளியீட்டிலும்  தொடர்ந்து கொண்டிருக்கிறார்.     இப்போது கணையாழிக்கு மறுபடியும்  சோதனை. கவிதா பதிப்பகம், பதிப்பாளராகத்  தொடர இயலா நிலை.  
ம.ராஜேந்திரன் வேள்வி போன்ற இப்பெரும் பொறுப்பையும் தற்போது ஏற்கிறார்.

வாசகப் படைப்பாளர்கள் ,இலக்கிய அன்பர்கள் ஆதரவில் கணையாழியின் கதை தொடரவேண்டும்.

Monday, March 5, 2012

கடைசிப்பக்கம் - இறைவன் விரும்பும் மொழி தமிழ்

இந்திரா பார்த்தசாரதி

தமிழ் இலக்கிய வரலாற்று நூல்களில், ஆழ்வார்களின் நாலாயிர திவ்யப் பிரபந்தச் செய்யுட்களுக்கு எழுதப்பட்ட உரைகளைப் பற்றிய குறிப்புகள் அதிகமாக இல்லை. காரணம், இவ்வுரைகள் 'வியாக்கியானங்கள்' என்று அழைக்கப் பட்டதாலோ என்னவோ, சமயத்தோடு மட்டும் வைத்து எண்ணப்பட்டன.

இவ்வுரையாசியர்களுடைய ஆழ்ந்த தமிழ்ப் பற்றைப் பற்றியோ, இவ்வுரைகளின் அற்புதமான உரை நயங்களைப் பற்றியோ பரவலாக யாருக்கும் தெரியாமலே  போய்விட்டது. நஷ்டம், தமிழ் ஆர்வலர்களுக்குத் தான்.

சம்ஸ்கிருதத்துக்கு இணையான இலக்கிய, சமய ஏற்றம் தமிழுக்குத் தந்தவர்கள் வைணவர்கள்தாம். தமிழ்ப் பிரபந்தத்திலும், சம்ஸ்கிருதவேத நூல்களிலும் ஒத்த தேர்ச்சி உடையவர்கள் 'உபய வேதாந்திகள்' என்று அழைக்கப்பட்டனர்.

ஆழ்வார் பாசுரங்கள், சம்ஸ்கிருத வேதங்களுக்குச் சமமாகவோ அல்லது உயர்ந்தவையாகவோ கருதப்பட்டன. பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தில் வரும் ஒரு செய்தியை இதற்குச் சான்றாகக் கூறலாம்.

வங்கிபுரத்து நம்பி என்கிற ஆந்திரப் பூரணர், ஒரு சமயம், ஏழை, எளிய இடைக் குலப் பெண்களுடன் உரையாடிக் கொண்டிருந்தாராம். அதைப் பார்த்த, ராமானுஜருடைய உறவினரும், சிஷ்யருமாகிய முதலியாண்டான், ‘அவர்களுடன் என்ன பேசிக்கொண்டிருக்கிறீர்கள்?’ என்று கேட்டாராம். ‘அவர்களை வேத ஸ்லோகங்களைச் சொல்லி ஆசிர்வதித்தேன்’ என்றாராம் வங்கிபுரத்து நம்பி.

‘அவர்கள் ஈரத்தமிழ் பேச, நீங்கள் அவர்களை முரட்டு சம்ஸ்கிருதத்தில் ஆசிர்வதித்தீரோ?’ என்று சிரித்துக் கொண்டே கேட்டாராம் முதலியாண்டான்!

ராமாநுஜர் பணித்ததற்கேற்ப திருவாய்மொழிக்கு உரை எழுதினார், அவருடைய தலை மாணாக்கராகிய திருக்குருகைப்பிள்ளான். நாலாயிர திவ்ய பிரபந்தத்தை வேதங்களுக்கு நிகராக ராமானுஜரும், வியாக்கியானக்காரர்களும் நிறுவியதற்கு ஆசார வைணவர்களிடமிருந்து எதிர்ப்பு இல்லாமிலில்லை. இதைப் பற்றி  நஞ்சீயர் குறிப்பிடுகிறார். நஞ்சீயருக்கும் ஆசார வைணவர்களுக்குமிடையே நிகழ்ந்த விவாதம் சுவாரஸ்யமானது.
எதிர்ப்பு அணி வைத்த முதல் வாதம்: ‘சம்ஸ்கிருதம் தேவ பாஷை. தமிழ் மானிட பாஷை. தமிழில் எழுதப்பட்டவற்றை சம்ஸ்கிருதத்தோடு இணைத்துப் பேசுவது தெய்வ நிந்தனை’. நஞ்சீயர் கூறினார்: ‘இறைவனை வழிபடும் மொழி எதுவாயினும் அது தேவ பாஷைதான்.’ எதிர்ப்பு அணியினர் கூறியது: ‘தமிழ் நான்கு சாதியினராலும் பேசப் படுவதால் அது தீட்டுப் பட்ட மொழி’. நஞ்சீயர் கோபத்துடன் சொன்னார்:’ இதைப் போன்ற அபத்தம் எதுவுமிருக்கமுடியாது. மக்கள் பேசும் மொழியே இறைவன் விரும்பிக் கேட்கும் மொழி. இது தமிழாகத்தானிருக்க முடியும்’.
எதிர்ப்பு அணியினர்,-சம்ஸ்கிருதத்தை தெய்வ மொழியாகப் போற்றியவர்கள்- சொன்னார்கள்:
‘நம்மாழ்வார் நாலாவது வருணத்தைச் சார்ந்தவர்.  அவர் பாசுரங்களை வேதங்களுக்குச் சமமாக வைத்துப் பேசுவது தெய்வ அபசாரம், இறைவனுக்கு அடுக்காது’.

நஞ்சீயர் இதைக் கடுமையாகக் கண்டித்துக் கூறினார்:’ ஒருவர் ஒரு குறிப்பிட்ட ஜாதியில் பிறப்பதற்கு அவர் பொறுப்பில்லை  மேலும், மேன்மை என்பது ஜாதியினால் வருவதன்று. அறிவினாலும் ஒழுக்கத்தினாலும் வருவது. வேதங்களைக் காட்டிலும்  நம்மாழ்வார் பாடல்களைத்தான் இறைவன் விரும்பிக் கேட்கிறான். உற்சவர் உலாவிலே  வேதம் சொல்லுகின்றவர்கள் ஒருவர் கையை இன்னொருவர் பற்றிச் செல்லும்போது, திவ்யப் பிரபந்தம் சொல்கின்றவர்கள் ஒவ்வொருவரும் அவ்வாறு ஒருவர் கையை மற்றவர்  பற்றாமல் சுதந்திரமாகத் தம் கைகளை வீசிக் கொண்டு  செல்வார்கள். தமிழ்ப் பாசுரங்களை’ மெய்ந் நின்று கேட்டருளும்’ இறைவன் தங்களைத் தாண்டிப் போக மாட்டான் என்கிற அவர்களுடைய மன உறுதியினால்தான் அவர்கள் தனித்தனியே நடந்து செல்கிறார்கள்’

இரண்டாண்டுகளுக்கு முன்பு, சிதம்பரத்தில் தீட்சிதர்கள், இறைவன் சந்நிதியில் ஓதுவார்கள் தமிழ்த் திருமுறை இசைப்பது வேத மரபுக்கு விரோதம் என்று கூறியது நினவுக்கு வருகிறதா?

ஆனால் வைணவர்களால், பன்னிரெண்டாம் நூற்றாண்டிலேயே இப்பிரச்சினையை எதிர் கொண்டு, ராமானுஜர் போன்ற மாபெரும் சமயத் தலைவர் மூலம் இதற்கு முடிவு காண முடிந்தது.

தொடர்: காலம் கொன்ற விருந்து - 6

நரசய்யா

இரண்டாவது விரோதியும் நிரந்தர நண்பனும்

‘மணிக்கொடி’ க்கு எழுதும் துணிச்சலைச் சிட்டிக்குக் கொடுத்தவர்   1932-இல் இந்தியா நாளேட்டின் துணை ஆசிரியராக இருந்து பின்னர் சுதேசமித்திரனில் தலையங்கம் எழுதும் துணையாசிரியராகச் சேர்ந்த எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி என்பவர் என்று சிட்டி கூறுவார். அவரிடம் தான் சிட்டி பத்திரிகைத் துறை பயிற்சி பெற்றார். அப்போது சிட்டிக்குத் தனது தமிழ் சொல்லாட்சியின் மீது நம்பிக்கை இருக்கவில்லை. மாறாக ஆங்கிலத்தில் சிறப்பாகவே எழுதிக் கொண்டிருந்தார். ஒருநாள் கிருஷ்ணமூர்த்தி  மணிக்கொடி இதழொன்றைக் காட்டி, சிட்டியை அப்பத்திரிகையில் ஏன் எழுதலாகாது எனக் கேட்டாராம். “தமிழ் இலக்கிய உலகத்திற்கு இப்பத்திரிகை ஒரு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது”  என்று அவர் சொன்னது, தனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது என்கிறார் சிட்டி. சிட்டி நகைச் சுவையுடன் சொன்னது - “தமிழ் இலக்கிய உலகம் என்று அவர் சொன்னது தான் எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது”

அப்பத்திரிகையைச் சிட்டி வாங்கி அதில் எழுதியிருந்த வ. ரா. வின் கட்டுரைகளைப் படித்தபோதுதான் அவருக்கு இப்படியும் எழுதுபவர்கள் தமிழில் உள்ளார்களா என்றும் அச்சில் உள்ள எழுத்துக்கு இவ்வளவு சக்தி உண்டா என்றும் தோன்றியதாம்!  சிட்டி, நான் சாதாரண மனிதன் எழுதும் போது சொன்னார்: “இவ்வளவு உயர்ந்த இலக்கியத்தரமிகுந்த பத்திரிகையில் நான் எழுதினால் பிரசுரிப்பார்களா என்ற சந்தேகம் இருந்தபோதிலும், நண்பர் கொடுத்த யோசனையை ஏற்று, ஒருவித அசட்டுத் தைரியத்துடன், அப்போது சென்னைக்கு காந்தி விஜயம் செய்ததை நினைவு கூர்ந்து, ஒரு நகைச் சுவை கட்டுரை எழுதி அனுப்பி வைத்தேன். சிலநாட்களில் மணிக்கொடியிலிருந்து ஒரு கடிதம் வந்தது. இனிமேல் எழுதாதே என்று புத்திசொல்லி எழுதியிருப்பார்கள் என்று நினைத்துக் கடிதத்தைப் பிரித்துப் பார்த்தேன். அது கு. ஸ்ரீனிவாசனால் எழுதப்பட்டிருந்தது. மணிக்கொடி காரியாலயத்துக்கு வரச்சொல்லி எழுதியிருந்தார்.”

அதைச் சொல்கையில் இவ்வளவு வருடங்களுக்குப் பின்னர் கூட சிட்டி உணர்ச்சிவசப்பட்டார்! அப்போதுதான் முதன் முறையாகச் சிட்டி வ. ரா. வைச் சந்தித்திருக்கிறார். அவருடன் பேசிக்-கொண்டிருந்த ஒருமணிநேரத்தில், அவர் கருத்துகளுக்கு அடிமையாகிவிட்டார் சிட்டி! அன்றிலிருந்து வ. ரா இறுதிவரை அவருடைய நிரந்தர நண்பனாகவும் ஆகிவிட்டார்.

வ. ராமஸ்வாமி பிறந்தது செப்டம்பர் மாதம் 17, 1889 ஆம் வருடத்தில்.  அவருடைய 60 ஆவது வயது நிறைவின் போது, அதாவது 1949 இல் அவரை ஆல் இந்தியா ரேடியோ, ஒலிபரப்பவேண்டி, ரேடியோவுக்கு ஒரு சொற்பொழிவு செய்யுமாறு கேட்டிருந்தது. ஒப்புக் கொண்டு தலைப்பை மட்டும் வ. ரா. தந்திருந்தார். அவர் கொடுத்திருந்த தலைப்பு, “எனது இரண்டாவது விரோதி” என்பதாகும். அன்றைய நிர்வாகியான், ஜி. டி சாஸ்திரிக்கும் சிட்டிக்கு மட்டும் தான் அத்தலைப்பின் பொருள் தெரியும். மற்ற நிர்வாகிகள் குழம்பிப் போயிருந்தனர். வ. ரா. பேச ஆரம்பித்த போதுதான் தலைப்பின் பொருளை விளக்கினார். “நான் பிறந்த வருடம் தமிழில் விரோதி எனப் பெயர் கொண்டது. இன்று எனது அறுபதாவது வயதில் இரண்டாவது விரோதி வந்துள்ளது” என்றார்!

இக்கட்டுரைத் தொடரின் ஆரம்பத்தில் நான் குறிப்பிட்ட காலம் கொன்ற விருந்தாக நான் கண்ட கருவூலத்தில், (சிட்டியின் பாதுகாப்பிலிருந்த பழைய அட்டைப் பெட்டியில்) வ. ரா பற்றிய பல பழைய குறிப்புகள் கிடைத்தன. அவற்றை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
வ. ரா. எழுதிய மகாகவி பாரதியார் என்ற நூலின் பழைய பிரதியும் கிடைத்து. வ. ரா. பாரதியைச் சந்தித்த விவரம் அந்நூலின் 4, 5 பக்கங்களில் காணப்படுகிறது.

இந்த நூலை 1944 ல் வெளியிட்டவர் வை. கோவிந்தன் என்பவர். அவர் 23- 8- 55 அன்று மூன்றாவது பதிப்பாக சுந்தரி என்ற வ ராவின் நாவலை வெளியிடுகையில், வ. ரா வின் மகாகவி பாரதியார் நூலை இரண்டாவது பதிப்பாக 1946இ-ல் வெளியிட நேர்ந்த விவரத்தைப் பற்றி எழுதுகிறார்:
“1940 என்று நினைக்கிறேன். 46, முத்துமாரி செட்டி தெருவில் என்னுடைய காரியாலயம் இருந்தது. அங்கே மாடியில் என்னுடைய அறை. ஸ்ரீ தி ஜ. ரங்கநாதன் என் அறைக்கு வந்தார். அப்போது தி. ஜ. ர. நான் நடத்திய சக்தி மாதவெளியீட்டில் ஆசிரியராக இருந்தார். வந்ததும், ‘வ. ரா. வந்திருக்கிறார். உங்களைப் பார்க்கவேண்டுமாம்’ என்றார். ’சரி. வரச் சொல்லுங்கள்’ என்றேன். வ. ரா வும் தி. ஜ. ரவும் வந்தார்கள்.

‘வாருங்கள்’ என்றேன். ‘சரிதானையா. நீர் எனக்குத் தமிழ் எழுதத் தெரியாது என்று சொன்னீராமே’ என்றார். ‘ஆமாம் கொச்சையாக நீங்கள் எழுதுகிறீர்கள். நிறைய நிறையப் பிறமொழிச் சொற்களை உபயோகிக்கிறீர்கள். அதுவும் அல்லாமல் தமிழ்ப் பண்டிதர்களை - அவர்கள் பிழையில்லாமல் எழுதுவதை - வேறு கண்டிக்கிறீர்கள். ஆதலால் உங்களுக்கும் தமிழுக்கும் சம்பந்தமில்லை’ என்று சொன்னேன். ‘உமக்குப் பிடிக்காதையா, இன்னும் கொஞ்ச காலத்தில் நீர், நான் எழுதுவது தான் தமிழ் என்று சொல்லப்போகிறீர்’ என்றார்.

அப்படித்தான் அவர் எழுதிய மகாகவி பாரதியார் என்ற புத்தகத்தை 1944-ஆம் வருஷத்தில் வெளியிட்டேன். தொடர்ந்தாற்-போல, சுந்தரி, வாழ்க்கைச் சித்திரம் என்ற நூல்களையும் வெளியிட்டேன். காரணம் என்ன? ஸ்ரீ வ. ரா. தமிழ்ப் பண்டிதர் அல்ல., தமிழ் மொழியை வளப்படுத்த வந்த புரட்சிக் காரர் என்பதை அறிந்தேன். மக்கள் எல்லோரும் படித்துப் பயன் பெற வேண்டுமானால், வ. ரா. அவர்களின் ஆணித்தரமான தமிழ் நடைதான் வேண்டும் என்ற முடிவுக்கு வந்தேன். பிறகுதான் அவருடைய நூல்களை வெளியிட்டேன்.

ஸ்ரீ வ. ரா. அவர்களைப் புரட்சிக்காரர் என்று சொல்லலாம், தீர்க்கதரிசி என்று சொல்லலாம். மக்களின் எழுத்தாளர் என்றும் சொல்லலாம். அதற்குச் சான்று இந்தச் சுந்தரி என்ற நாவலே போதும்.

படித்துப் பாருங்கள், முப்பத்தெட்டு வருஷங்களுக்கு முன் வெளி வந்த இந்த நாவல் ஏன் இன்றும் வெளிவருகிறதென்று.
இந்த மூன்றாம் பதிப்பு வெளிவருவதைப் பார்க்க வ. ரா. உயிருடன் இல்லை. தமிழ் மக்கள் பயனடையத்தானே இந்தப் புத்தகத்தை எழுதினார். வ. ரா வின் எண்ணம் ஈடேறுகிறதல்லவா?”

இது எழுதப்பட்ட நாள் 25 - 5 - 1955. இந்த நூலின் முதற்பதிப்பு, 1917 இலும், இரண்டாம் பதிப்பு 1946 இலும், மூன்றாம் பதிப்பு மேலே குறிப்பிட்ட நாளிலும் வெளிவந்துள்ளன.

இந்த நாவலின் இரண்டாவது பதிப்புக்கு, வ. ரா. எழுதிய முன்னுரை, சுந்தரியின் புனர் ஜன்மம் என்று தலைப்பு இடப்படிருந்தது.  அதில் “. . .அந்த சமயத்தில் என் கற்பனையில் கருத்தரித்தவள் சுந்தரி. 1915 ஆகஸ்டில் ஆரம்பித்து 1916 மார்ச்சில் சுந்தரியை முடித்தேன். சுந்தரியை வெளியிடுவதற்கு நான் பட்ட கஷ்டத்தைச் சொல்லி முடியாது. சுமார் எண்ணூறு ரூபாய் வரையில் செலவாகும் என்று சொன்னார்கள் அச்சுத்தொழில் நிபுணர்கள். அவ்வளவு பணத்துக்கு நான் எங்கே போக? இதிலும் ஓரளவு டாக்டர் ராஜன் எனக்கு உதவி செய்தார்.  சுந்தரி 1917-ஆம் வருஷம் முற்பகுதியிலேயே வெளி வந்தாள். நான் போட்டது ஆயிரம் பிரதிகள். மூன்று மாதத்துக்குள் அத்தனையும் விற்றுப் போயிற்று. திருச்சியில் கையெழுத்துப் பிரதியிலேயே சுந்தரியயை படித்த நண்பர், சுந்தரி ரொம்ப கடுமையான பாஷையில் இருக்கிறது. உண்மையை, கலையழகோடு சேர்த்துச் சொல்லவேண்டும். இப்பொழுது நீங்கள் எழுதியிருக்கும் முறையினால் மேல் ஜாதிக்காரர்களுக்கும், மடாதிபதிகளுக்கும், சன்னியாசிகளுக்கும் உங்கள் பேரில் ஆத்திரம் உண்டாகும்’ என்றார். 'உண்டாகுமா' என்று கேட்டேன். ஆம் என்று அவர் அழுத்திச் சொன்னார். அப்படியானால் நான் எழுதின முறைதான் சரி என்று சொல்லிவிட்டு அவரிடம் விடை பெற்றுக்கொண்டேன்” என்கிறார்! இதை அவர் எழுதிய நாள் 20.03.1946. முதற் பதிப்பு வந்து கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்குப் பின்னர் வந்த இரண்டாம் பதிப்பில்.

சமர்ப்பணத்தில், ‘எனது பரமகுரு ஸ்ரீமான் அரவிந்தருக்கு’ என்று எழுதியுள்ளார். அரவிந்தரைப்பார்க்க வ. ரா. புதுச்சேரி சென்றார். பாரதியைக் கண்டார். பாரதியுடன் அரவிந்தரைக் காணச் சென்றார். அரவிந்தரை பாரதி முரடன் என்றுதான் அப்போது குறிப்பிட்டாராம்!
இப்பதிப்புக்கு தி. ஜ ரங்கநாதன் முன்னுரை எழுதியிருந்தார். அதுவே அன்றைய் எழுத்துலககை வெளிச்சமிட்டுக் காட்டுகிறது. முக்கியமாக தமிழ் நாவ்ல்கள் நிலையைப் பார்க்கலாம்: தி. ஜ. ர. எழுதுகிறார்: “நான் ஏராளமாகத் தமிழ் நாவல்கள் படித்த காலம். இந்தக்காலம், அநேகமாகப் பதினைந்து வயதிலிருந்து இருபத்தைந்து வயதுக்குள் பெரும்பாலான வாலிபர்களுக்கு ஏற்பட்டிருக்கும். அந்தக் காலத்தில், நல்லது, கெட்டது, சுவையற்றாது, சுவையுள்ளது குப்பை, கூளம் முத்து மரகதம் அத்தகைய எல்லா நாவல்களும் ஒன்று தான். கதை என்றிருந்தால் போதும்; படித்து விடுவோம். பகுத்தறிய மாட்டோம். எல்லாம் பிடித்தாற்போலத்தான் இருக்கும். ஆனாலும் இதுதான் இலக்கியப்பிரஞ்ஞை உருவாகும் காலம். சுவை திரளும் காலம். கால ஓட்டமும் வாழ்க்கை அனுபவ்மும் சிந்தனைமுதிர்ச்சியும், படித்தவைகளை எல்லாம் சலித்துவிடும். காலவெள்ளம் அடித்துச் செல்லும் அவைகளில் ஒன்றிரண்டுதான் கரையேறும் என்மனதில் அப்படிக் கரையேறின ஒன்று ‘சுந்தரி’ “
வ. ரா வுக்கு உதவிய கணபதிராயன் பற்றிய விவரங்களை அவரே தருகிறார்.

1938 துவக்கத்தில் விரைவாக மக்களிடையே பரவி வந்த ஊடகமான திரைப்படத்தின் ஆற்றலை உணர்ந்து, வ. ரா. ராமானுஜர் வாழ்க்கை வரலாற்றைப் படமாக்க முயன்றார். அவர் வசனமெழு, அன்றைய பிரபல் எழுத்தாளர்கள் நடிக்க முன் வந்தனர். இளைய ராமானுஜராக ந. ராமரத்தினம், முதியவராக சங்கு சுப்பிரமணீயன், திருக்கச்சியூர் நம்பியாக பிச்சமூர்த்தி நடிக்க ஏ. நாராயணன் இயக்கத்தில் படம் எடுக்கப்பட்டது. தானே நடித்திருந்த-போதும், அன்றைய சிறந்த விமர்சகரான ராமரத்தினம், “ராமானுஜர் ஒரு கண்வலி” என்ற தலைப்பில் அப்படத்தை விமர்சித் திருந்தார்! வ. ரா வும் மற்றோர்களும் தெரிந்துகொண்ட-பாடம், சிட்டி சொற்களில், “திரைப்பட நடிப்புக்கும், இலக்கிய பணிக்கும் உள்ள அல்லது இல்லாத தொடர்பு கடும் சோதனைக் குள்ளாகியது.”

பின்னர் இந்நாடகம், வானொலி-யில் 1985  ல் ஒலிபரப்பப்பட்டது.

வ. ரா வின் மற்ற பழைய விவரங்களைத் தொடர்ந்து பார்ப்-போம்.
(அவர் எழுதிய சில நூல்களின் சிதைந்திருந்த சில முகப்புப் பக்கங்களையும் மற்ற சில பக்கங்களையும் காணலாம்)

மைதிலி மொழிக் கவிதை

டாக்டர் ஷெபாலிகா வர்மா
ஆங்கிலம் வழி தமிழில்: கி. சீனிவாச ராகவன்

பெண்

நான் ஒரு பெண்ணாய்ப் பிறந்து விட்டேன்
அது என் பிழையல்ல
ஆம், பெண்ணாய்ப் பிறந்தது என் பிழையல்ல
உன் கற்பனையின் ஒப்பனையில்
நான் ஒரு சாதாரண மானுட ஜன்மமல்ல --
மாதவம் செய்து பிறந்த மங்கை
தேவியென பூஜிக்கப்படும் தெய்விக நங்கை

ஆனால்,
எதார்த்தத்தில் என் நிலை என்ன தெரியுமா --
பாவம்செய்தோரை பாதாளப் படுகுழியில் தண்டிக்கும்
நரகதேவதையும் கதறியழுவாள் என் அவலக்குரல் கேட்டு
ஆற்றாது நான் வடிக்கும் கண்ணீர்
வற்றாத கோசி நதியாய் பிரவாகமெடுக்கும் --
இருள் சூழ்ந்த இரவுகள்,
வசந்தத்தைக்காணாத வாழ்க்கை
அசோகவனத்து சீதையின் ஆழ்ந்த சோகம்
என் விழிகளில் --

என் ஜாதகத்தில் மட்டுமல்ல
என் சேலைத்தலைப்பின் வேலைப்பாட்டில்கூட
நன்மைக்கு அதிபதியாகும் நட்சத்திரங்களில்லை
சாதகத்தைத்தரும் சந்திரனும் சஞ்சரிக்கவில்லை
பாதகத்தையே தரும் ராகுவும் கேதுவும்தான் அங்கு
அலங்கரிக்கும் சித்திரங்கள்

இந்த இழிநிலை இன்றோடு அகலட்டும்
இனி,
வீசும் காற்றும் என்னை மாசுபடுத்தாது விலகட்டும்
நரம்பும் சதையும், உடம்பில் ஓடும் குருதியும்
இருபாலர்க்கும் ஒன்றே எனில்
ஏற்றத்தாழ்வுக்கு இடமேது
மென்மைத்தன்மை பெண்மைக்குப் பெருமையெனில்
எனக்குமட்டும் ஏனிந்த கொடுமை

பூங்கொடி நான் --
அசைந்தாடுவேன்
தென்றல் வீசினால்
ஆர்த்தெழுவேன்
ஆணாதிக்கம் பேசினால்
பிறந்துவிட்டது புதுயுகம--பெண்களுக்குப்
புரிந்து விட்டது சுதந்திரத்தின் சுகம்

இனி,
அகத்திலும், எங்கள் முகத்திலும்
இருள் என்பதே இல்லை
ஆகாயமே எங்கள் எழுச்சியின் எல்லை
சடங்குகள், சம்பிரதாயங்கள் -- இவை
தடைக்கற்களானால் தகர்த்தெறிவோம்
புதுயுகம், புத்தொளிபரப்பும் புதுப்பிக்கப்பட்ட வானம்
நவீன சமுதாயம் நோக்கி பெண்களின் வெற்றிப்பயணம்

இத்தனை மாற்றங்களுக்கிடையேயும்
என் தாயுள்ளத்தின் கனிவு மாறவில்லையே
கவனித்தாயா மகனே --
கர்ப்பத்தில் உன்னை உருவாக்கி
பத்துமாதம் சுமப்பதில் சுகம் கண்டு
மானுடப்பிறவியை உனக்கு அளிக்கிறேன்
ஆனால்,
உன்னையே படைக்கும் என்னை
ஆட்டிப்படைக்கும் ஆண்டவன் ஆகிறாய் நீ
ஆண்மைய கருத்தாடலைத் தவிக்கவும்
பெண்மைய கருத்தாடலைத் தொடங்கவும்
இதுவே சரியான தருணம்

எகிப்தைச் சுட்டும் திருமலை கற்கால ஓவியம்

நா. கண்ணன்

கற்காலம் என்பது உண்மையிலேயே கற்காலமா? என்ற கேள்வி அவ்வப்போது அறிஞர்கள் மனதில் எழுந்துகொண்டே இருக்கிறது. சந்திரனில் கால்வைக்கும் தொழில்நுட்பம் நிறைந்த 21ஆம்நூற்றாண்டில் வாழ்ந்து கொண்டு, இன்று நாம் கற்கால மனிதன் சாதித்தவை என்று காணும் எச்சங்கள் அவ்வளவு சாதாரணமாகத் தோன்றவில்லை. உதாரணமாக கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இரண்டு குன்றுகளின் மேல் நிரம்பப் பெருங்கற்காலக் கல்லறைகள் உள்ளன. ஒன்று இரண்டல்ல நூற்றுக்கணக்கில். அவை செங்கல் கட்டடங்களாக இருந்திருந்தால் ஆச்சரியப்பட வேண்டியதில்லை. ஆனால் இரண்டு மீட்டரிலிருந்து 5 மீட்டர் உயர, அகலமுள்ள கற்கூரைகளை எப்படி இவ்வளவு அழகாக உருவாக்கினார்கள்? எப்படி அவைகளை அடுக்கினார்கள்? எங்கு இதற்கானகற்களை வெட்டி எடுத்தார்கள்? போன்ற கேள்விகள் நம்மை ஆச்சரியப் படுத்தும். ஊரில் ஒருவர் இறந்துவிட்டால், உடனே இம்மாதிரிக் கல்லறைகளை உருவாக்கிவிட முடியாது. சிலவாரங்களாவது ஆகும் ஒன்றை உருவாக்க. எனவே அக்காலத்தில் இதற்கான தொழிற்சாலைகள் இருந்திருக்க வேண்டும். ஊரில் ஏதாவது ஒன்று என்றால் தயாராக ஒரு கல்லறை இருந்திருக்க வேண்டும். சென்னையில் இப்போது குப்பைக்கூளங்களை அள்ளக் கூட கனரக இயந்திரங்களைப் பயன்படுத்துகிறார்கள். அப்படி இருக்க இத்தகைய கனமான பாறைக்கூரைகளை எப்படிக் குன்றின் மேல் ஏற்றி இருப்பர்? ஏற்கனவே இருக்கும் கல்லறைகளைச் சிதைக்காமல் எப்படிப் புதியற்றை நிர்மாணித்து இருப்பர்? தொழில் நுட்ப அறிவும், முன் திட்டமிடலும் இல்லாமல் இதைச்சாதித்து இருக்க முடியாது. எனவேதான் ஏதோ நாம் முன்னேறிவிட்டோம், அவர்கள் ‘கற்காலமனிதர்கள்’ என்று வாய் கூசாமல் சொல்ல முடியவில்லை!

 இதில் இன்னும் பெரிய அதிசயம் என்னவெனில் கற்காலக் கலாச்சாரம் என்பது இங்கிலாந்து, கிரேக்கம், துருக்கி, இந்தியா, இந்தோனீசியா என்று தூரக்கிழக்கில் கொரியாவரை இருப்பது. இது எப்படிச் சாத்தியப்பட்டது? உதாரணமாக தமிழ் மரபு அறக்கட்டளை (www.tamilheritage.org) சமீபத்தில் மேற்கொண்ட களப்பணியில் சிவகங்கை வட்டத்தைச் சார்ந்த திருமலை எனும் திருத்தலத்தில் (திருப்பத்தூர் போகும்வழி) உள்ள கற்பாறை ஓவியங்களை அவை அழிவதற்கு முன் நிரந்தரப்படுத்தும் முயற்சியில் இறங்கியது. அப்போது அங்கு செவ்வண்ணத்தில் வரையப்பட்ட இரண்டு ஓவியங்கள் மிகமுக்கியமானவையாகப்பட்டன. ஏனெனில், எகிப்திய தெய்வங்களுள் விண்ணரசன் என்று கருதப்படும் ‘ஹோரஸ்’ எனும் கழுகுக்கழுத்துள்ள தெய்வஉருவம் இங்கு, தமிழகக் குன்று ஒன்றில் வரையப்பட்டிருப்பது அதிசயமல்லவா?

இந்தக்கற்காலமக்கள் பலர் நினைப்பது போல் நாகரிகத்தில் பின்தங்கியவர்கள் இல்லை என்று தோன்றுகிறது. ஏனெனில் செம்மொழி (2009 சூலை -திசம்பர்) இதழில் புதுஎழுத்து மனோன்மணி அவர்கள் பதிப்பித்துள்ள சில ஓவியங்கள் இம்மக்கள் விவசாயிகள் என்பதை நிரூபிக்கின்றன (அவரது அனுமதியுடன் படம் இங்கு மீண்டும் வெளியிடப்படுகிறது).

 சரி, இம்மக்கள் எப்படிப் பயணப்-பட்டிருப்பர்? இங்கிலாந்து முதல் கொரியா வரை பரவியுள்ள ஒரு நாகரீகம் வெறும் கால்நடையில் மட்டும் பரவியிருக்குமா? இல்லை இவர்களுக்குக் கப்பல்பயணம் பற்றிய அறிவு இருந்ததா? இக்கேள்விக்கு விடையாகத் திருமலை ஓவியங்கள் சில யூகங்களை முன்வைக்கின்றன. உதாரணமாக, தென்னகக் கடற்பயணம் என்பது துருவநட்சத்திரத்தைவிட தென்னக வானில் மிகத் தெளிவாகத் தெரியும் மிருகசீரிஷம் எனும் நட்சத்திரக் கூட்டத்தையே வழிகாட்டியாக எடுத்துக் கொண்டது. பால்வீதியின் மையப்பகுதியில் அமையும் ஓரியன் எனும் இம்மண்டலம் உலகின் எப்பகுதியில் பயணப்பட்டாலும் தெரியும். தமிழர்கள், தென்னாசியா, தூரக்கிழக்கு நாடுகளுக்குப் பயணப்படவெண்டுமெனில் மிருகசீரிஷமே பிரதானம். அவைவானின் கிழக்கே ஜூலை முதல் ஆகஸ்டு வரை மாலை வேளையிலும், டிசம்பர் -ஜனவரி மாதங்களில் அதிகாலையிலும் தெரியும். ’கடலோடி’ நரசய்யா தரும் குறிப்புகளிலிருந்து தைமாதம்பிறந்து ஆருத்ரா தரிசனம் ஆகிவிடில் கிழக்கே பயணப்பட ஏதுவான பருவக்காற்று உருவாகிவிடுவதால், தொலைதூரப் பயணம் கொள்ளும் வியாபாரிகளிடம் “தை பிறந்தால் வழி பிறக்கும்” எனும் பழமொழி உருவாகி இருப்பதாகத் தெரிகிறது. இந்தச் சூழல் ஞானம் என்பது தொன்று தொட்டுக் கற்காலக் கலாசாரத்திலேயே இருந்திருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் திருமலை கற்பாறை ஓவியங்கள் மிகத்தெளிவாக ஓரியன் வான்மண்டலம் நமக்குக் காட்டும் ’மிருகசிரம்’ (மிருகசீரிஷம்) எனும் படத்தை நம் கண் முன்னே வைக்கிறது.

கிரேக்கத் தொன்மத்தில் கூட வாள் தூக்கிய வீரன் ஒருவரின் தோற்றத்தையே இம்மண்டலம் நினைவுறுத்துவதாகக் கொள்வர். அவ்வகையில் பார்க்கும் போது ஒருகையை மேலேதூக்கி, இன்னொருகையை மல்லுக்குக் காட்டுவது போல் அமையும் இவ்வோவியம் ஓரியன் நட்சத்திரக்குழுவை காட்டுவது போல் இருக்க வாய்ப்புண்டு. ஏதாவது முக்கியத்துவம் இல்லையெனில் ‘வேலை மெனக்கெட்டு’ மலைமேல் ஏறி, மிகவும் கடினமான சரிவில், சாரம்கட்டி காலத்தை வென்று நிற்கக்கூடிய வண்ணச்சாறில் இவ்வோவியங்களை வரைந்திருக்க மாட்டார்கள்.

ஆக எகிப்திய நாகரிகத்தின் ஒரு தெய்வம் தமிழ் மண்ணில் வரையப்பட்டிருப்பதும், அதுவே வணிக வழிகாட்டும் குறியீடாக அமைவதும் தற்செயல் அல்ல என்று தோன்றுகிறது.

ஏனெனில் பொருந்தல் அகழ்வாராய்ச்சியில் கிடைத்த அதே முதுமக்கள் தாழிகள், கண்ணாடி மணிமாலை, பவளமணிமாலை, பானை எழுத்துக்கள், இரும்பு ஆயுதங்கள், குதிரையைப் பாவித்திருப்பதற்கான அடையாளங்கள், கற்கால கல்லறைகள் இவை அப்படியே ’காயா’ எனும் தொன்மையான கொரியப் பகுதியில் கிடைப்பானேன்? இத்தனை ஆயிரம் மைல்களை இம்மக்கள் எப்படிக்கடந்து இருப்பர்? அதுவும் இரண்டாயிரம், மூவாயிரம் வருடங்களுக்கு முன்? இம்மாதிரிப் பழம் சான்றுகள் எத்தனையோ சேதிகளைச் சொல்லலாம்! அவை, அதற்குரிய மரியாதையுடன் பாதுகாக்கப் பட்டால்! திருமலை முழுவதும் திருட்டுக் காதலர்களின் பெயர்களே இன்று இவ்வோவியங்களின் மேலே பொறிக்கப்-பட்டுள்ளன! அரசு நடவடிக்கை எடுக்கப் போவதாக செய்தித்தாள் சொல்கிறது.

கிருஷ்ணகிரியின் கற்பாறைக் கல்லறைகள் பாதிக்குமேல் வீட்டு நிலைப்படி மிதிகற்களாக மாறிவிட்டன என சுகவனமுருகன் (புதுஎழுத்து மனோன்மணி) சொல்கிறார். அவர் சில வருடங்களுக்கு முன் கணக்கிட்ட முன்னூறு கல்லறைகளில் பத்தோ பதின்னொன்றோதான் இன்று பார்க்கும்படி உள்ளதாகச் சொல்கிறார். மூவாயிரம் வருடங்கள் தாக்குப்பிடித்த சரித்திரச் சான்றுகள் 21ஆம்நூற்றாண்டுத் தமிழனால் சூறையாடப்படுகின்றன எனும் செய்தியைக் கேட்கும் போது, கற்கால மனிதன் நாகரிகம் கொண்டவனா? இல்லை, சந்திராயணா செலுத்தும் 21ஆம்நூற்றாண்டுத் தமிழன் நாகரிகமானவனா? என்ற துக்கமான கேள்வி எழாமல் இல்லை!